வேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 7 பேர் பலி

வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேரிட்டதில் கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலே 5 பேர் பலியாகிவிட்டனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை சார்பில் தகவல்கள் வெளியாகின. தற்போது, காயம் அடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிகை 7 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close