மங்களூரு எக்ஸ்பிரஸ் மோதி 3 யானைகள் பலி; கோவையில் பெரும் சோகம்

இந்த ஆண்டின் துவக்கத்தில் இதே போன்று 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Elephants death, Navakkarai, Madukkarai,

கோவை வாளையாறு மற்றும் எட்டிமடை அருகே சென்று கொண்டிருந்த மங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் (12602) வேகமாக அடித்துச் சென்றதில் மூன்று யானைகள் நேற்றிரவு உயிரிழந்துள்ளன. இந்த நிகழ்வு கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி உயிரிழந்த மூன்று யானைகளில் குட்டி மற்றும் ஒரு மக்னா யானை அடிபட்ட உடனே தண்டவாளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. ஆனால் பெண் யானை ஒன்று சுமார் 100 மீட்டருக்கு அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே தமிழக வனத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று காலை உயிரிழ்ந்த யானைகளை பார்வையிட கேரள வனத்துறையினர் வந்துள்ளனர். இன்று காலை இந்த மூன்று யானைகள்க்கும் பிரேத பரிசோதனை நடத்தப்படும். மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை அருகே ட்ராக் எண் 506/8-ல் இந்த விபத்து நடந்துள்ளது. ரயிலை மிகவும் வேகமாக இயக்கி வந்த லோக்கோ பைலட்கள் இருவரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகள் அதே ரயிலில் வாளையாறு பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இதே போன்று ஆண் யானை ஒன்று மதுக்கரை பகுதியில் ரயில் மோதியதில் விபத்திற்குள் சிக்கியது. வனத்துறையினர் தீவிர சிகிச்சைகள் வழங்கிய போதும் அந்த யானை உயிரிழந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three elephants die after being hit by a train near madukkarai coimbatore

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com