Advertisment

வெளியானது கருத்துக் கணிப்பு: தி.மு.க.வுக்கு எத்தனை இடங்கள்?

2024 மக்களவ தேர்தலில் இந்தியா கூட்டணி 29-35 இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2-6 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

author-image
Jayakrishnan R
New Update
Exit polls

2024 மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Lok Sabha Election | Dmk | Aiadmk | Tn Bjp | 2024 மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளன. இந்த நிலையில், டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புகள் இன்று (மார்ச் 08, 2024) வெளியாகியுள்ளன.

இதில், இந்தியா கூட்டணிக்கு 29-35 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2-6 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisment

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 1-3 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்றவை 0-2 இடங்களில் முன்னிலை வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் தி.மு.க.வுக்கு 24-28 தொகுதிகளிலும், காங்கிரஸூக்கு 5-7 தொகுதிகளிலும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, அ.தி.மு.க 1-3 இடங்களிலும், பா.ஜ.க 2-6 இடங்களிலும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Tn Bjp Aiadmk Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment