/indian-express-tamil/media/media_files/2025/10/14/tiruchirappalli-to-chennai-special-train-to-stop-thiruverumbur-trichy-mp-durai-vaiko-tamil-news-2025-10-14-16-08-21.jpg)
"திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் மக்களுக்கு நான் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த வேளையில் இந்த கோரிக்கை நிறைவேறியதில் உள்ளபடியே மிகவும் மகிழ்ந்தேன்." என்று துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று செய்தியாளர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
கடந்த 29.09.2025 அன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் திருவெறும்பூர் மக்களின் முக்கிய கோரிக்கையான, திருச்சி–தாம்பரம் சிறப்பு ரயில் (ரயில் எண்கள் 06190/06191) திருவெறும்பூரில் நிறுத்தம் கோருதல் தொடர்பாக கோரிக்கை கடிதம் கொடுத்து, அதனை விரைவில் நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டேன்.
எனக்கும் எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களுக்கு இன்றைய நாளின் இரண்டாவது மகிழ்ச்சியான செய்தி.
— Durai Vaiko (@duraivaikooffl) October 14, 2025
கடந்த 29.09.2025 அன்று திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் திருவெறும்பூர் மக்களின் முக்கிய கோரிக்கையான,… pic.twitter.com/rPvtEgrFe8
இரண்டு நாட்களுக்கு முன்பாக ரயில்வே கோட்ட மேலாளரை தொலைபேசியில் அழைத்து இது சம்பந்தமாக நினைவூட்டினேன். அப்போது அவர், இதனை பரிந்துரை செய்து தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதனை சுட்டிக்காட்டி நேற்று நடந்த திஷா (DISHA) கூட்டத்திலும் தெரிவித்திருந்தேன். இன்று அதற்கான உத்தரவை பொது மேலாளர் வெளியிட்டுள்ளார்.
நாளையிலிருந்து திருச்சி - சென்னை சிறப்பு ரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் மக்களுக்கு நான் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த வேளையில் இந்த கோரிக்கை நிறைவேறியதில் உள்ளபடியே மிகவும் மகிழ்ந்தேன். திருவெறும்பூர் மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இது மிக மகிழ்ச்சியான செய்தி.
இவ்வாறு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மதிமுக மாவட்ட செயலாளர்கள் சோமு, மணவை தமிழ்மாணிக்கம் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.