கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம்: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த பா.ஜ.க

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
Martin Jeyaraj
New Update
TN BJP Chief Nainar Nagendran announce protest 20 year old student allegedly gang raped Coimbatore press meet Vanathi Srinivasan Tamil News

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், நாளை தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்திலே மிகவும் பாதுகாப்பான நகரம் என கருதப்பட்ட கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. பெண்களை பாதுகாப்பதாக கூறும் திராவிட மாடல் தி.மு.க அரசின் தோல்வியை இச்சம்பவம் காட்டுகிறது. 

Advertisment

மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற பாலியல் சம்பவங்களுக்கு காரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருக்கிறது. கோயம்புத்தூரில் போதை பொருட்கள் அதிகமாக புலங்குகிறது. அதனை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர் மீது குண்டர் சட்டம் மற்றும் தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், "தமிழகத்தில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய போதும் மாநில அரசு சார்பில் உரிய பதில் தரப்படவில்லை. பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதை செய்யாத போது உரிய பாதுகாப்பு விஷயங்களை பெண்களே தான் முன்னெச்சரிக்கையாக செய்து கொள்ள வேண்டிய நிலை தமிழகத்தில் உள்ளது." என்று தெரிவித்தார். 

மேலும், கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பா.ஜ.க மகளிர் அணி சார்பில்  கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements
Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: