Advertisment

மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி நன்றி

இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீனவர்கள் விடுதலை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி நன்றி

இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை விடுவிப்பது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையில், 42 படகுகள் மற்றம் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 75 தமிழக மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு முயற்சி எடுத்து மீனவர்கள் மற்றும் படகுகள விடுவித்ததற்கு தமிழக மக்கள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் நான் எழுதிய கடிதங்களுடன், கடந்த 27-ம் தேதி ராமேஸ்வரத்தில் நான் தங்களை சந்தித்த போது, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை விடுவிக்க தேவையான முயற்சிகளை எடுக்கும்படி நான் தங்களை கேட்டுக் கொண்டேன்.

நீங்கள் தமிழகத்தில் இருந்து புறப்படும் முன்னரே, இலங்கை அரசு தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தது. மேலும், இலங்கை நீதிமன்றங்கள் இலங்கையில் உள்ள 75 தமிழக மீனவர்களையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக தற்போது ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த விஷயத்தில் தாங்கள் எடுத்த சரியான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழக மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு பலனாக, இலங்கையில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள மீதமுள்ள 107 படகுகளையும் விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment