Advertisment

நவ.30- ல் சென்னையில் மவுனப் போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பில் சென்னையில் மௌனப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

author-image
Janani Nagarajan
New Update
நவ.30- ல் சென்னையில்  மவுனப் போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பில் சென்னையில் மௌனப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

Advertisment

'கலைஞர் மீண்டும் உயிர் பெற்று வர' வேண்டி, கலைஞரின் நினைவிடத்தில் அரசு மருத்துவர்கள் மவுனப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

publive-image

இப்போராட்டத்தின் கோரிக்கைகளைப் பற்றி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

"அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும். பணி இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு நீதி வேண்டும்.

நம் முதல்வரை நினைத்து இரண்டு முக்கிய தருணங்களில் அரசு மருத்துவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். அவற்றில் முதலாவது 2019 ம் ஆண்டு அக்டோபரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவர்களின் உண்ணாவிரதப்  போராட்டத்தின் போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நம் முதல்வர், மருத்துவர்களின் அருகே அமர்ந்து கொண்டு, ""வருத்திக் கொள்ள வேண்டாம். அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசாணை 354 ஐ அமுல்படுத்துவோம்"" என்று கூறினார்.

இரண்டாவதாக எதிர்பார்த்தது போலவே கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் கடந்த ஒன்றரை வருட கால கழக ஆட்சியில், ஒருநாள் காலைப் பொழுது கூட,  உதய சூரியன் அரசு மருத்துவர்கள் வாழ்வில் உதித்தது இல்லை", என்று டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுகிறார்.

மேலும், "கலைஞரின் அரசாணை 354 ஐ கழக அரசே எட்டி மிதிக்கும் அவல நிலையால், அரசு மருத்துவர்கள் இந்தியாவிலேயே.. ஏன் உலகத்திலேயே குறைவான சம்பளம் வாங்கும் அவமானம். கோரிக்கைகளில் கடுகளவு சிறிய கோரிக்கையை கூட நிறைவேற்றித் தர மறுக்கும் அரசின் இரக்கமற்ற  மனப்பான்மை வருத்தமளிக்கிறது.

கோவிட்டால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இன்றுவரை மாநில அரசு 10 பைசா கூட நிவாரணம் தரவில்லை என்ற வருத்தம். திவ்யா விவேகானந்தனுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி தர மறுத்தனர். பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் இழைக்கப்படும் அநீதி. 

மருந்து இல்லை, எக்ஸ்ரே இல்லை, கட்டிடம் பழசா இருக்கு என எந்த பிரச்சினையாக இருந்தாலும், அரசு மருத்துவர்கள் தான் காரணம் என்று அநியாயமாக  பலிகடாவாக்கி விடுகின்றன.

தன் இறுதி மூச்சு வரை நூறு சதவீதம் நாகரீகத்துடனும்,  கண்ணியத்துடனும் வாழ்ந்து மறைந்த கலைஞரின் வழி வந்தவர்களின் ஆட்சியில், பெண் மருத்துவர்களை தூக்கி போடுங்க என்ற அநாகரிக பேச்சால் ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட ஆதங்கம் மற்றும் மன வருத்தம். எனவே 'முத்தமிழறிஞர் கலைஞரே எழுந்து வாருங்கள். வாருங்கள்... நீங்கள் கொடுத்த ஆணையை நிறைவேற்றித் தாருங்கள்' என அழைத்து இந்த போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.  

எனவே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகின்ற நவம்பர் 30 ம் தேதி சென்னையில் கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்து விட்டு, மவுனப் போராட்டம் மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Protest Doctor Chennai Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment