Advertisment

சூரப்பாவுக்கு எதிரான விசாரணைக்குழு அமைப்பு நியாயமற்றது - தமிழக முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

Letter to EPS 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் சூரப்பாவின் நல்ல பண்புகளுக்கான சான்றிதழை ஆளுநர் அளித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Tamilnadu Governor Banwarilal writes letter to Chief Minister Palanisamy for ordering probe against Surappa Tamil News

Tamilnadu Governor wrote Letter to Palanisamy Tamil News : கடந்த சில நாள்களாகவே அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றி நகரும் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீது “நிதி முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்” செய்ததாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைப்பதில் தமிழ்நாடு அரசாங்கம் மீதான அதிருப்தியைத் தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமிக்குத் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்த மதிப்புமிக்க நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் சூரப்பாவின் நல்ல பண்புகளுக்கான சான்றிதழை ஆளுநர் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்த விசாரணை சரியானதல்ல என்றும் இதனை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர். ஆனால், ஆளுநரின் இந்தக் கடிதத்தை மாநில அரசு ஒப்புக் கொள்ளவில்லை அல்லது இன்னும் பதிலளிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.200 கோடி ஊழல் உட்படத் துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகத் தீவிரமானவை எனக் கண்டறிந்ததை அடுத்து, இதன் விசாரணைக் குழுவின் தலைவராகக் கடந்த நவம்பர் 11-ம் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை அரசாங்கம் நியமித்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் முன்னோக்கிச் சென்றதை அடுத்து, பல்கலைக்கழகங்களின் அதிபராகவும் இருக்கும் தனக்குத் தெரியாமல் மாநில அரசு குழு அமைத்ததாக ஆளுநர் வருத்தப்பட்டுள்ளார்.

மேலும், பெயர் அறியப்படாத மனுக்களின் அடிப்படையில் துணைவேந்தருக்கு எதிராக அரசாங்கம் விசாரணையைத் தொடங்க முடியுமென்றால், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி வழங்கலாம் என்று சில கல்வியாளர்கள் குற்றம் சஷ்டி வருகின்றனர்.

தற்செயலாக, சட்டமன்றத்தில் மூன்று மாதங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிளவுபடுத்துவதற்கான மசோதாக்களை புரோஹித் இன்னும் அனுமதிக்கவில்லை. மேலும் அவர், 7.5% நீட் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு மாதத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டார். ஆனால், மாநில அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக் குழு அமைப்பதற்கான அரசாங்க உத்தரவை ரத்து செய்யக் கோரும் பொது நலன் தொடர்பான வழக்கில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிபர் பன்வாரிலால் புரோஹித்தை ஒரு பகுதியாகச் சேர்த்ததுடன், மேலும் விசாரணைக்கு டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

M K Surappa Eps Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment