பொதுப்பெயர் வகை மருந்துகள் மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.
இந்நிலையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். பொங்கல் முதல் செயல்படவுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் முன்னாள் படை வீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம். இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு 30% மூலதனம் மானியமும், 3 %வட்டி மானியமும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஜனவரி 2026க்குள் 75000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்படும் என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“