4 பேர் குடும்பம்... ஒரு ரேஷன் கார்டுக்கு மாதம்தோறும் ரூ 300 :தமிழக அரசு இவ்ளோ கொடுக்குது; புரிஞ்சுக்கோங்க மக்களே!

ரேஷன் கடைகள் மூலமாக மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு எவ்வளவு தொகை செலவு செய்கிறது என உங்களுக்கு தெரியுமா? அது பற்றிய விவரம் இங்கே பார்க்கலாம்.

ரேஷன் கடைகள் மூலமாக மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு எவ்வளவு தொகை செலவு செய்கிறது என உங்களுக்கு தெரியுமா? அது பற்றிய விவரம் இங்கே பார்க்கலாம்.

author-image
selvaraj s
New Update
TN Govt provide monthly Rs 300 for 4 family members ration cards holder Tamil News

தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1.1 கோடி பேர் பேர் 'அரிசி அட்டை' வைத்திருக்கிறார்கள்.

அடித்தட்டு மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக இருப்பவை ரேஷன் கடைகளும், ரேஷன் கார்டுகளும் தான். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாக அல்லது மானிய விலையில் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியை ரேஷன் கடைகளும் ரேஷன் ஊழியர்களும் செய்து வருகிறார்கள். 

Advertisment

தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1.1 கோடி பேர் பேர் 'அரிசி அட்டை' வைத்திருக்கிறார்கள். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தமிழக அரசு மாதம் தோறும் 20 கிலோ அரிசி (இதில் 5 கிலோ வரை கோதுமை இருக்கலாம்) இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டப்படி இந்த அரிசியை தமிழகத்திற்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

அரிசியை தவிர சர்க்கரை பாமாயில் துவரம் பருப்பு ஆகியனவும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கிறது. குறிப்பாக மார்க்கெட் விலையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரையை கிலோ 25 ரூபாய் விலையில் மாதம் தோறும் 2 கிலோ ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு வழங்குகிறது. மார்க்கெட் நிலவரப்படி 150 ரூபாய் வரை விற்கப்படும் ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. மார்க்கெட் விலையில் 150 முதல் 160 ரூபாய் வரை விற்கப்படும் துவரம் பருப்பு, ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்தில் சர்க்கரை மூலமாக 50 ரூபாய் துவரம் பருப்பு மூலமாக 125 ரூபாய், பாமாயில் மூலமாக 125 ரூபாய் என 300 ரூபாய் வரை தமிழக அரசு மாதம் தோறும் வழங்குகிறது.

Advertisment
Advertisements

தமிழகம் முழுக்க மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் இருக்கின்றன. ரேஷன் பொருட்களை மாதா மாதம் வழங்குவது மட்டுமல்லாமல் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி அரசு வழங்கும் சிறப்பு தொகுப்புகளை வழங்குவது, அரசு ரொக்கமாக வழங்கும் நிதியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகிய பணிகளையும் இந்த ரேஷன் கடைகள் செய்கின்றன. எந்தத் திட்டமாக இருந்தாலும் ரேஷன் கடைகள் மூலமாக அமுல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களை நேரடியாக போய் சேர்கின்றன. ரேஷன் கடைகளில் நவீன எடை மெஷின் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்ட பிறகு முறைகேடுகள் பெருமளவில் குறைந்து இருக்கின்றன. தற்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் பொருட்கள் வாங்கியதும் அவர்கள் வாங்கிய பொருள் விவரம், விலை ஆகியன உடனடியாக குறுந்தகவலாக அவரவர் மொபைல் போனுக்கு வந்துவிடுகிறது. எனினும் கிராமங்களில் அறிவிக்கப்பட்ட நாட்களில் முறையாக ரேஷன் கடைகளை திறக்காமல் இருப்பது, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை அனைவருக்கும் உரிய முறையில் வழங்காமல் இருப்பது உள்ளிட்ட புகார்கள் இருக்கின்றன. அவற்றையும் சரி செய்தால் பொது விநியோகத்துறை இன்னும் சிறப்பு பெறும்.

Ration shop Ration Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: