Advertisment

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடைகளில் இதுவரை பெறாதவர்கள் என்ன செய்வது?

தமிழக அரசு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
Jan 16, 2022 18:20 IST
TN govt special announcement for still did not receives Pongal gift ration card holder, Pongal gift, ரேஷன் கடை, பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு, தமிழ்நாடு அரசு, பொங்கல் பரிசு, pongal parisu, chennai, pongal gift announcement

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்காகவே தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது. ஆனால், பொங்கல் பரிசு பொருட்கள் மண்டல கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது. அதே போல, சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனால், தமிழக அரசு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியபடி, 16ம் தேதி (இன்று) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வரவேண்டிய, நிலுவையுள்ள கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பை கடைகளில் இறக்கும் பணி நடைபெறும்.

17ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் திறந்து செயல்படும். இதுவரை பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Pongal #Pongal Gift #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment