வலுப்பெறாத காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 23) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 23) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
abhisudha
New Update
Chennai Rains Heavy Rains Orange Alert 6 dist oct 22 and 23 IMD Tamilnadu Weather Tamil News

TN Rain Live Updates |Chennai Rain Forecast |School Holiday |Heavy Rainfall Alert |Low Pressure Area

தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி, தமிழக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் நில​வு​கிறது. இது காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைய வாய்ப்பு இல்​லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment

இது ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாகவே இன்று (அக்​.23) வடதமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும். தென்கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்று அதே பகு​தி​களில் நில​வு​கிறது.

இது வடக்​கு, வடமேற்கு திசை​யில் இன்று நகர்ந்து செல்​லக்​கூடும். மேலும், தெற்கு அந்​த​மான் கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதனால், தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்று முதல் 27-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

5 மாவட்டங்களில் கனமழை:

இன்று சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சி, ராணிப்​பேட்டை மாவட்டங்களி​லும், நாளை (அக்​.24) கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டிலும் புதுச்சேரி​யிலும் 26, 27-ம் தேதி​களில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி, செங்கல்பட்டு, கடலூர், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யிலும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்யக்கூடும்.

Advertisment
Advertisements

தொடர்ந்து வரும் நாட்களிலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான சூழல் நிலவும். 

பள்ளி விடுமுறை:

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாகவும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 23) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 15 ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 15 அணைகள் மற்றும் 1,522 ஏரிகள் நிரம்பியுள்ளன. அரசுத் துறைகள் வெள்ளம் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வட, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுச்சேரி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Rain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: