தமிழகத்தில் இளம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதி எது தெரியுமா?

தமிழகத்தில் 18 – 19  வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 898979

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு இன்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு இன்று சென்னையில் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இதில், 2.92 கோடி ஆண் வாக்காளர்களும், 2.98 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5,472 பேர் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர் விவரித்த தகவலின் படி,

தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி – சென்னை துறைமுகம் – 1,66,511

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி – சோழிங்கநல்லூர் – 6,18,695

மாவட்ட அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது – 38,18,999

18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதி – திருப்பரங்குன்றம்

தமிழகத்தில் 18 – 19  வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 898979

மேலும், முழு வாக்காளர்கள் பட்டியல் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி வலைத்தளமான http://elections.tn.gov.inல் காணலாம்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn voters list tamilnadu chief election commissioner satyabrata sahoo

Next Story
தேர்தல் ரேஸில் வேகம் காட்டும் அதிமுக! 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்புTamil Nadu news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com