scorecardresearch

’அரசு நிர்ணயித்த ஊதியத்தை கொடுங்கள்’: பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அரசாங்கம் கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.  இதனை அடுத்து 3 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும், எனவே அதனை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: To give salary as government fixed kovai cleaning works protest