“இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா” - கமல்ஹாசன் ட்வீட்

இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும், அயரா தன்மையும் கண்ட வெற்றி.

‘இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா’ என கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் இரவும் பகலுமாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நடிகை நயன்தாரா, நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம், ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் போராட்டத்தை சுமூகமாக முடிக்க முடியாத தமிழக அரசு, இறுதியில் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தது.

தடியடி நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததை முன்னிட்டு, இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடந்தன. அதைக் கொண்டாடும் பொருட்டு, ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

“இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும், அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!” என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

×Close
×Close