Advertisment

News Highlights : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35,000ஐ தாண்டியது; 397 பேர் பலி

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர், மருத்துவ பணியை தொடங்க அனுமதி தமிழக சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழகத்தில் புதியதாக 1,896 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தமிழகத்தில் கொரோனா நிலவரம் :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் உச்சமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,297 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 365 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரையிலான மொத்த பாதிப்பு 16,99,225 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் வெளையில், வரு 29 முதல் 31 தேதிக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என, பல கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்புகளின் இறுதிச் சடங்குகள்; சென்னை மாநகராட்சி தகவல் :

சென்னையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்வதில் குறைபாடு இருந்தால் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்துவாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 044-25384520 என்ற எண்ணில் அழைப்புகளையும், 9498346900 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமும் புகாரினை அளிக்கலாம்.

வீட்டிலேயே கோவிட் டெஸ்ட்; ஐசிஎம்ஆர் அனுமதி :

கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை வீட்டிலேயே கண்டறிய ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐசிஎம்ஆர் அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இந்த கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள, ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறை ; வெளி நாட்டில் படித்த டாக்டர்களுக்கு பணி :

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர், மருத்துவ பணியை தொடங்க அனுமதி தமிழக சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மருத்துவர்கள் நியமனத்தில் ஏற்கனவே இருந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் பயிற்சிபெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவ பணி என்ற விதியையும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதியையும் தளர்த்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:21 (IST) 20 May 2021
    மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

    சென்னையில் நேற்று முன் தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.



  • 20:47 (IST) 20 May 2021
    தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 35,000ஐ தாண்டியது; 397 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 497 பேர் பலி

    தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 25,368 பேர் டிஸ்சார்ஜ்



  • 19:33 (IST) 20 May 2021
    7 பேர் விடுதலை விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று உடனடியாக 7 பேர்களையும் விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.



  • 19:11 (IST) 20 May 2021
    கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து ஏற்படும் ம்யூகோர்மைகோஸிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோயால் பலர் இறந்துள்ள நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:08 (IST) 20 May 2021
    தமிழகத்தில் மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி

    தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக தங்கள் மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்பி வைத்து ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • 18:52 (IST) 20 May 2021
    கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு

    தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு சார்பில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசாணை வெளியிட்டுள்ளார். மாநிலங்களும் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.



  • 18:41 (IST) 20 May 2021
    7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018 ல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கடித்தத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ளார்



  • 18:40 (IST) 20 May 2021
    7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018 ல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கடித்தத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ளார்



  • 18:28 (IST) 20 May 2021
    2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனத்திற்கு அரசாணை வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • 17:47 (IST) 20 May 2021
    11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    அடுத்த 3 மணி நேரத்தில் 1சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • 17:23 (IST) 20 May 2021
    மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 17:00 (IST) 20 May 2021
    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு காற்றுடன் கூடிய மழை

    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு காற்றுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது மழை காரணமாக இருள் சூழ்ந்து காணப்படும் சென்னை ஆலந்தூர், போரூர், ராமாபுரம், தாம்பரம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது



  • 16:57 (IST) 20 May 2021
    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு காற்றுடன் கூடிய மழை

    சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு காற்றுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது மழை காரணமாக இருள் சூழ்ந்து காணப்படும் சென்னை ஆலந்தூர், போரூர், ராமாபுரம், தாம்பரம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது



  • 16:40 (IST) 20 May 2021
    கோவை, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு - மத்திய அரசு

    தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களைப் பொறுத்தவரை, தமிழகம், சிக்கிம், மேகாலயா போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.



  • 16:23 (IST) 20 May 2021
    கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால், பரவலையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும் என கருத்து கூறியுள்ளது. மேலும் தடுப்பூசி, மருந்து ஒதுக்கீடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 16:14 (IST) 20 May 2021
    தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு

    தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து மருத்துவ ஆக்சிஜனை தமிழகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.



  • 16:00 (IST) 20 May 2021
    முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்

    கேரள மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



  • 15:44 (IST) 20 May 2021
    முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்

    கேரள மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



  • 15:08 (IST) 20 May 2021
    சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கிறார் நீதிபதி கலையரசன்

    சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கிறார் நீதிபதி கலையரசன். நீதிபதி அனுப்பிய நோட்டீசுக்கு சூரப்பா பதில் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை. விசாரணைக்குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்த சூரப்பா, எந்தவிதமான முறைகேட்டிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.



  • 15:07 (IST) 20 May 2021
    தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான பணிகளை கவனிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

    தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான பணிகளை கவனிக்க ஐஏஎஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அந்த குழுவில் 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.



  • 14:53 (IST) 20 May 2021
    5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



  • 14:13 (IST) 20 May 2021
    கறுப்பு பூஞ்சை: மத்திய அரசு அறிவுறுத்தல்

    கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பும் தொற்று நோய் என கூறியுள்ளது.



  • 13:31 (IST) 20 May 2021
    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    அந்தமான் ஓட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



  • 13:30 (IST) 20 May 2021
    தனியார் கல்லூரிகள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை

    தமிழகத்தில் சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அந்தந்த கல்லூரிகளே அண்ணா பல்கலை.க்கு செலுத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்,



  • 13:27 (IST) 20 May 2021
    தனியார் கல்லூரிகள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை

    தமிழகத்தில் சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அந்தந்த கல்லூரிகளே அண்ணா பல்கலை.க்கு செலுத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்,



  • 12:59 (IST) 20 May 2021
    பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

    நேர்மையான திறமையான நிர்வாகத்தினால் எந்த இடரையும் முறியடிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய நண்பரை இன்று போனில் வாழ்த்தினேன். அடுத்த ஐந்தாண்டுகளில் கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும். இன்னும் இன்னும் சிறக்கட்டும் என்று பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.



  • 12:57 (IST) 20 May 2021
    தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:44 (IST) 20 May 2021
    18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முக ஸ்டாலின்

    தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் தற்போது தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான 3.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.



  • 12:32 (IST) 20 May 2021
    18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முக ஸ்டாலின்

    தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் தற்போது தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான 3.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.



  • 12:31 (IST) 20 May 2021
    கரும் பூஞ்சை தொற்று

    கருப்பு பூஞ்சை நோய் பாதித்தால் சுகாதாரத்துறைக்கு தகவல் தர வேண்டும் என்றும் அதனால் பீதி அடைய வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். உடலில் சக்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்கனவே இருந்தது என்றும் அவர் கூறினார்.



  • 12:09 (IST) 20 May 2021
    காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும்

    கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. அதில் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும் என்றும், வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



  • 12:07 (IST) 20 May 2021
    மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு

    கொரோனா நோய் தொற்றின் பக்க விளைவுகளில் ஒன்றாக அறியப்பட்ட கரும்பூஞ்சை தொற்று மதுரையில் இதுவரை 50 நபர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா மற்றும் கேரளாவில் ஏற்கனவே காணப்பட்ட இந்த தொற்று தற்போது தமிழகத்திலும் அறியப்பட்டுள்ளது.



  • 11:45 (IST) 20 May 2021
    மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மேலும் ஒரு தலைவர் பதவி விலகல்

    மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார் குமரவேல். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுவதாக குமரவேல் விளக்கம் அளித்துள்ளார். தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை கைவிடுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 11:15 (IST) 20 May 2021
    கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு

    தனியார் ஆய்வுக்கூடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள முதல்வர் மருத்துவக் காப்பீட்டு பயனாளிகளுக்கு ரூ. 550 கட்டணம். முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம்.

    வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை



  • 11:13 (IST) 20 May 2021
    தந்தை மகற்காற்றும் நன்றி - நிதி அமைச்சர் ட்வீட்

    தமிழக சட்டமன்ற உறுப்பினராக 4 முறையும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய P.T.R. பழனிவேல்ராசனின் நினைவு தினம் இன்று. அதனை ஒட்டி அவருடைய மகனும், நிதி அமைச்சருமான பி.டி.ஆர். ”நீங்கள் இல்லை என்றால் நான் நிச்சயம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டேன்” என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

    முந்தி இருப்பச் செயல்'



    இத்தகைய முன்னோர்களுக்கு வாரிசாக இல்லையென்றால் நான் நிச்சயம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டேன், பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றும் எண்ணமும் இருந்திருக்காது.https://t.co/SF1HRHawPG

    — Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 20, 2021


  • 11:08 (IST) 20 May 2021
    சேலத்தில் ஆய்வு நடத்தும் முதல்வர் முக ஸ்டாலின்

    சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட முக ஸ்டாலின், அனைத்து வசதிகளுடன், 500 படுக்கைகள் கொண்ட புதிய மையத்தை திறந்து வைத்துள்ளார்.

    சேலத்தில் covid19 சிகிச்சை முன்னெடுப்புகளை ஆய்வு செய்தேன்.



    அரசு மருத்துவமனைகளில் 1583, தனியார் மருத்துவமனைகளில் 2896 படுக்கைகள் உயிர்வளி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.



    அனைத்து வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட புதிய மையத்தைத் திறந்து வைத்தேன். மேலும் 500 படுக்கைகள் அமைக்கப்படும். pic.twitter.com/lCgexzqpLE

    — M.K.Stalin (@mkstalin) May 20, 2021


  • 10:56 (IST) 20 May 2021
    சென்னை - சேலம் விமானப் பயணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்!

    கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்ல விமானத்தில் பயணம் செய்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர், திருப்பூரில் 18+ தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறார்.



  • 10:54 (IST) 20 May 2021
    கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை!

    ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், கொரோனா பாதித்த 31,29,878 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 10:52 (IST) 20 May 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3874 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,7,122 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.



  • 10:51 (IST) 20 May 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3874 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,7,122 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.



  • 10:38 (IST) 20 May 2021
    புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்!

    கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு "வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும்" எனவும் தெரிவித்துள்ளது.



Tamilnadu Tamilnadu Live News Udpate Stalin Vaccine Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment