Advertisment

ஸ்டாலின் மாஸ்; இ.பி.எஸ்-ஐ முந்திய ஓ.பி.எஸ்… ட்விட்டரில் டாப் 5 தமிழக தலைவர்கள் யார் யார்?

ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழகத்தின் டாப் 5 தலைவர்கள் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top 5 Tamilnadu politicians with followers in Twitter Tamil News

Top 5 Tamilnadu politicians in Twitter Tamil News

Twitter, Top 5 Tamilnadu politicians Tamil News: இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடும், அதனை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில், ஒரு குறிப்பிட்ட பயனர் எவ்வளவு பின்தொடர்பவர்களை (ஃபாலோயர்ஸ்) கொண்டிருக்கிறார் என்பது அவ்வப்போது பேசு பொருளாகிறது. அவ்வகையில், உலகில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் முதன்மையான ஒன்றாக ட்விட்டர் வலம் வருகிறது.

Advertisment

ட்விட்டர் அதன் பல்வேறு அம்சங்களுக்காக பிரபலமான ஊடகமாக உள்ளது. பொதுவாக ட்விட்டரில், பிரபலங்கள் பலரும் தங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல், பல்வேறு துறையைச் சார்ந்த நிறுவங்களும் செய்து வருகின்றனர். இந்தியாவில் ட்விட்டர் அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் குறித்த மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடுகிறார்கள். இதனால், அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழகத்தின் டாப் 5 தலைவர்கள் யார் யார்? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

  1. மு.க.ஸ்டாலின் (@mkstalin)
publive-image

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கை 3.5 மில்லியன் ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம் தற்போது எப்போதும் ஆக்டிவாகவே இருக்கிறது. கட்சி மற்றும் அரசு சார்ந்த அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். 88 பேரை பின்தொடரும் அவர் இதுவரை 7,922 டீவீட்டுகளை பதிவிட்டுள்ளார்.

  1. ஓ. பன்னீர்செல்வம் (@OfficeOfOPS)
publive-image

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டர் கணக்கை 9 லட்சத்து 30 ஆயிரத்து 563 பேர் பின்தொடர்கிறார்கள். 2016ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அவரது கணக்கில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகள் பதிவிட்டுள்ளன. 23 பேரை பின்தொடரும் அவர் தனது கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. சீமான் (@SeemanOfficial)
publive-image

தமிழ் சினிமாவின் இயக்குநராக தனது வாழ்க்கையை தொடங்கிய சீமான் இன்று செந்தமிழன் சீமானாக நாம் தமிழர் கட்சியை (தலைமை ஒருங்கிணைப்பாளர்) வழிநடத்தி வருகிறார். 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அவரது ட்விட்டர் கணக்கை 6 லட்சத்து 44 ஆயிரத்து 800 பேர் பின்தொடர்கிறார்கள். கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வரும் அவர் 4,726 டீவீட்டுகளை பதிவிட்டுள்ளார். அவர் 7 பேரை பின்தொடருக்கிறார்.

  1. தொல். திருமாவளவன் (@thirumaofficial)
publive-image

நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான தொல். திருமாவளவனை ட்விட்டரில் 6 லட்சத்து 17 ஆயிரத்து 897 பேர் பின்தொடர்கிறார்கள். அவர் 115 பேரை பின்தொடர்கிறார். சமத்துவம், சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமாவளவன் இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ளார். 2016ம் ஆண்டில் ட்விட்டர் பக்கத்தில் இணைந்த அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. எடப்பாடி கே பழனிசாமி (@EPSTamilNadu)
publive-image

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி தனது ட்விட்டர் கணக்கை கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கியுள்ளார். அவரை தற்போது 5 லட்சத்து 55 ஆயிரத்து 876 பேர் பின்தொடர்கிறார்கள். அவர் ஒரே ஒரு ட்விட்டர் கணக்கை பின்தொடர்கிறார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ள அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. கே.அண்ணாமலை (@annamalai_k)
publive-image

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான கே.அண்ணாமலையை 5 லட்சத்து 46 ஆயிரத்து 636 பேர் பின்தொடர்கிறார்கள். 2009ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்த அவர் 882 பேரை பின்தொடர்கிறார். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகள் பதிவிட்டுள்ளார். அவர் தனது கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss)
publive-image

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் 4 லட்சத்து 13 ஆயிரத்து 915 ஃபாலோயர்சை கொண்டிருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்த அவர் 2 பேரை பின்தொடர்கிறார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ள அவர் தனது கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. டிடிவி தினகரன் (@TTVDhinakaran)
publive-image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் கடந்த 2017ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்தார். ஒரு ட்விட்டர் கணக்கை பின்தொடரும் அவரை 3 லட்சத்து 23 ஆயிரத்து 191 பேர் பின்தொடர்கிறார்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ள அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. விஜயகாந்த் (@iVijayakant)
publive-image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) நிறுவினார். அவர் ட்விட்டரில் கடந்த 2016ம் ஆண்டு இணைந்தார். அவரை தற்போது 2 லட்சத்து 24 ஆயிரத்து 404 பேர் பின்தொடர்கிறார்கள். எந்த ட்விட்டர் கணக்கையும் பின்தொடராத அவர் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ளார். மேலும், அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. தி. வேல்முருகன் (@VelmuruganTVK)
publive-image

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் கடந்த 2012ல் ட்விட்டரில் இணைந்துள்ளார். அவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். 443 பேரை பின்தொடரும் அவர் இதுவரை 3 மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ளார். அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. கே.எஸ் அழகிரி (@KS_Alagiri)
publive-image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ் அழகிரி கடந்த 2019ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்தார். 247 பேரை பின்தொடரும் அவரை 38 ஆயிரத்து 819 பேர் பின்தொடர்கிறார்கள். இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ள அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. டாக்டர் கே கிருஷ்ணசாமி (@DrKrishnasamy)
publive-image

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கே கிருஷ்ணசாமியை 31 ஆயிரத்து 395 பேர் பின்தொடர்கிறார்கள். 3 பேரை பின்தொடரும் அவர் கடந்த 2012ல் ட்விட்டரில் இணைத்துள்ளார். 586 டீவீட்டுகளை பதிவிட்டுள்ள அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. கே.பாலகிருஷ்ணன் (@kbcpim)
publive-image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) (சிபிஐ(எம்)) மாநிலக்குழு செயலாளரான கே.பாலகிருஷ்ணன் கடந்த 2014ம் ஆண்டில் தனது ட்விட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார். தற்போது வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ள அவரை 23 ஆயிரத்து 446 பேர் பின்தொடர்கிறார்கள். 37 பேரை பின்தொடரும் அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

  1. ஜி.கே.வாசன் (@TMCforTN)
publive-image

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே.வாசன் கடந்த 2014ல் ட்விட்டரில் இணைத்துள்ளார். 61 பேரை பின்தொடரும் அவரை 9 ஆயிரத்து 244 பேர் பின்தொடர்கிறார்கள். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ளஅவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

கமல்ஹாசன் (@ikamalhaasan)

publive-image

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை 7.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர் 10 பேரை பின்தொடர்கிறார். இதுவரை அவர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீவீட்டுகளை பதிவிட்டுள்ளார். ஆனாலும், அவர் ஒரு ஸ்டார் நடிகர் என்பதால் இந்த பட்டியலில் அவரை கொண்டு வருவது சரியாக இருக்காது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami Kamal Haasan Seeman Ttv Dhinakaran Paneerselvam T Velmurugan Gk Vasan Vijayakanth Thirumavalavan Mk Stalin K Balakrishnan Tamilnadu Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment