சென்னை மாதவரம் அருகே 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இந்தப் பெட்ரோல் நிலையம் அருகே லேத் பட்டறை ஒன்று உள்ளது.
இந்தப் பட்டறை அருகே மணலியை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது லாரியை நிறுத்தி இருந்தார். அந்த லாரியை எடுக்க வந்தபோது, அதனருகே திருநங்கை ஒருவர் கைகள் கட்டப்பட்டு, கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் இது தொடர்பாக பண்ணை காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
திருநங்கையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருநங்கையை கொன்றது யார்? பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட திருநங்கை சனா என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/