Advertisment

'என்னோட அடுத்த படம் திருநங்கைகள் பத்தி தான்' - நடிகர் லாரன்ஸ்

Raghava Lawrence New Film Announced At Thirunangai 25: நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர் ராகவா லாரன்ஸ் திருநங்கைகள் அனைவராலும் அண்ணா என்று அழைக்கப்பட்டார்.

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
Transgenders Celebrations, Thirunangai 25 in Chennai, Raghava Lawrence Supports Transgenders, திருநங்கை 25, திருநங்கைகள் நிகழ்ச்சி

Transgenders Celebrations, Thirunangai 25 in Chennai, Raghava Lawrence Supports Transgenders, திருநங்கை 25, திருநங்கைகள் நிகழ்ச்சி

Thirunangai 25: "எனக்கு நாலு புள்ளைங்க, அவங்க தான் என்ன காப்பாத்துவாங்க அப்டினு நெனச்சினு இருந்தேன். என் கடைசி புள்ள இப்டி பொம்பளையா மாறி வந்து நின்னப்போ எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல. அவளோ அழுதேன், செத்து போய்டலாம்னு நெனச்சேன்; என் புள்ள கூட பேசவே இல்ல, அவன் எங்க இருக்கான் என பன்றான் எதுவுமே தெரியாது.  இன்னிக்கு இந்த நிகழ்ச்சிக்கு இவளோ வருஷம் கழிச்சி வந்துருக்கேன், இப்போ நா அவள ஏத்துக்க முயற்சி பண்றேன்," இந்த தாயின் பேச்சு; மூன்று நாட்களாக நடைபெற்ற 'திருநங்கை 25' விழாவின் வெற்றிக்கு ஒரு எடுத்து காட்டு.

Advertisment

Transgenders Celebrations, Thirunangai 25 in Chennai, Raghava Lawrence Supports Transgenders, திருநங்கை 25, திருநங்கைகள் நிகழ்ச்சி Thirunangai 25 At Chennai: சென்னையில் நடைபெற்ற திருநங்கைகள் நிகழ்ச்சி

தமிழகத்தில் உள்ள திருநங்கைகளின் திறமையை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும், வேலை வாய்ப்பு ஏர்படுத்தி அவர்களை பொதுச்சமூக நீரோட்டத்தில் இணையச் செய்யும் நோக்கத்தில் சகோதரன், தோழி மற்றும் ஐ.டி.ஐ ஆகிய தண்ணார்வ தொண்டு நிறுவனங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டது. இறுதி நாளான சனிக்கிழமை அன்று; ஆட்டம், பாட்டம், அழகி போட்டி என கோலாகலமாக நிகழ்ச்சி அரங்கேறியது.

Transgenders Celebrations, Thirunangai 25 in Chennai, Raghava Lawrence Supports Transgenders, திருநங்கை 25, திருநங்கைகள் நிகழ்ச்சி Thirunangai 25 At Chennai: சென்னையில் நடைபெற்ற திருநங்கைகள் நிகழ்ச்சியில் அழகிப் போட்டி

“முன்னாடி நாங்கெல்லாம்  மும்பைக்கு போவோம்; இப்போ எங்க சமூகத்தை சேந்தவங்க தமிழ்நாட்டுக்கு வராங்க, இதுக்கு முக்கிய காரணம், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா தான். மூன்றாவது பாலினமா எங்கள அங்கீகரிச்சு உதவிய அவங்கள நாங்க மறக்கமாட்டோம்," என்று சொல்கிறார் சகோதரன் அமைப்பின் முக்கிய நிர்வாகி சுதா.

இந்த விழாவிற்கு வந்தது பெருமை அளிப்பதாக கூறினார் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர், சத்யஸ்ரீ. "எனக்கு பார் கவுன்சிலில் பதிவு பண்றதுக்கு அவளோ தயக்கம். நம்மள இவங்க எப்படி ACCEPT  பன்வாங்க அப்டினு நெறைய யோசிச்சேன். என்னோட நண்பர்கள், நலம் விரும்பிகள் என்ன அப்ளை பண்ண சொல்லி ஊக்கம் தந்தாங்க. அவங்க சப்போர்ட் இல்லனா, இங்க நா இப்டி நின்னு பேச முடியாது."

"இந்த சமூகத்துக்கு நா சொல்றது ஒன்னு தான் - நாங்களும் உங்கள மாரி தான். எங்கள ஒதுக்கிடாதீங்க," என்று சொன்னார் சத்யஸ்ரீ.

Transgenders Celebrations, Thirunangai 25 in Chennai, Raghava Lawrence Supports Transgenders, திருநங்கை 25, திருநங்கைகள் நிகழ்ச்சி Thirunangai 25 At Chennai: சென்னையில் நடைபெற்ற திருநங்கைகள் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்

நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர் ராகவா லாரன்ஸ் திருநங்கைகள் அனைவராலும் அண்ணா என்று அழைக்கப்பட்டார். திருநங்கை ஸ்வேதா கூறுகையில் "காஞ்சனா திரைப்படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. அந்த படம் வெளிவந்த பிறகு எங்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைத்தது.அதற்கு என்றும் லாரன்ஸ் அண்ணாவிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்."

பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் தான் திருநங்கைகளை பார்த்து பயபட்டதாக கூறினார். "அவங்க கை தட்றது, பேசுறது எல்லாமே எனக்கு பிடிக்காது. ஆனா, காஞ்சனா படம் எடுக்கும்போது  அவங்க எவளோ கஷ்டம் அனுபவிக்கிறாங்க அப்டினு எனக்கு புரிஞ்சிது. நாம எல்லாருமே ஒரே குடும்பம், ஒரே ரத்தம்."

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அமைந்தது லாரன்ஸ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்தது தான். "காஞ்சனா படத்துல ஒரு பகுதி திருநங்கைகளை பத்தி இருந்தது. என்னோட அடுத்து  படம் முழுக்க முழுக்க திருநங்கைகளை பத்தி தான் இருக்கும்; படத்தோட பெரு 'நாயக்'.

Transgenders Raghava Lawrence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment