ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை அவசியம்: இதயம் பாதுகாப்பு பற்றி திருச்சி போலீசாருக்கு பயிற்சி
தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டும், ஆண்டுக்கு ஒருமுறை இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என இதயநோய் மருத்துவ நிபுணர் மற்றும் இதயநோய் ஆலோசகர் டாக்டர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டும், ஆண்டுக்கு ஒருமுறை இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என இதயநோய் மருத்துவ நிபுணர் மற்றும் இதயநோய் ஆலோசகர் டாக்டர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருச்சி விமான நிலைய காவல்துறை எல்லைக்குள்பட்ட மொராய்ஸ்சிட்டி ஆடிட்டோரியத்தில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை சார்பில், திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Advertisment
நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இதயநோய் சிறப்பு மருத்துவர்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் (தெற்கு, வடக்கு), உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவலர்கள்
அப்போது, இதயநோய் மருத்துவ நிபுணர் மற்றும் இதயநோய் ஆலோசகர் டாக்டர் அரவிந்தகுமார் மற்றும் டாக்டர் ஆண்ட்ரூஸ்தாஸ் ஆகியோர்கள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கினார்கள். தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் ஆணையர், “திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல்துறையினர் யாரும் இதய நோயால் பாதிக்கப்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
Advertisment
Advertisements
டாக்டர் அரவிந்த்குமார், “நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இதயத்தை பாதுகாக்க சரியான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டும், ஆண்டுக்கு ஒருமுறை இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“