Advertisment

லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமனுக்கு பிரியாவிடை: முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் சென்னையில் இருந்தார்.

author-image
WebDesk
New Update
Trichy: Farewell to Lt.Gen.Arun Ananthanarayanan Arun Tamil News

Farewell to Lt.Gen.Arun Ananthanarayanan Arun in Trichy

க.சண்முகவடிவேல்

Advertisment

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 13 பேர் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். அப்போது, கடும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டு குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, சென்னையில் உள்ள இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும், மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்கள் கொடுத்த தகவல்கள் தான் தங்களுக்கு பல்வேறு வகையில் பயன்பட்டன என்று கூறினார். அந்த கிராம மக்களுக்கு பாராட்டுகளையும், சன்மானங்களையும் வழங்கி கவுரவித்தார்.

அதேநேரம், தமிழகத்தில் பலியான பிவின் ராவத்தை நினைவு கூறும் வகையில் டெல்டா மண்ணில் இருந்து அவரது திருவம் சிலையாக உருப்பெற்றது. முன்னாள் முப்படைத்தளபதி தியாகி பிபின் ராவத் திருவுருவச்சிலையை புது தில்லியில் உள்ள இராணுவ தலைமையகத்தில் அமைவதற்கு இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் பேருதவியாக இருந்தார். இவர் இளைஞர்கள் முன்னேற்றத்திலும், சமூக நலன்களிலும் அக்கரை கொண்டவர். இப்படி தமிழக மக்களின் அன்பைப்பெற்றவர் தற்போது வடமேற்கு பிராந்திய படைத் தளபதியாக பணி இடமாறுதல் பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு செல்கிறார்.

publive-image

இதனை முன்னிட்டு அவருக்கு நடைபெற்ற வழியனுப்பு விழாவில் பிபின் ராவத் சிலை வடிவமைப்பு குழுவினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் டெல்டாவில் இருந்து சிலை வடிவமைப்பு குழுவினரும், சமூக ஆர்வலர்களும் வழியனுப்பு விழாவில் பங்கேற்றனர். குழு சார்பில் தளபதி அருண்-க்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவம் நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் டெல்டாவில் இருந்து வந்தவர்களுக்கு நினைவு மெடல்களை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வில் கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பின் தலைவர் மில்ட்ரி பாபு, முன்னாள் படை வீரர் கேப்டன் செல்வராஜ், ஆலோசகர் குடந்தை வி.சத்தியநாராயணன், கடலூர் சாரல் சமூக நல அறக்கட்ளையின் தலைவர் சங்கர், வருமான வரித்துறை ஆய்வாளரும், சமூக ஆர்வலருமான அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment