Advertisment

இண்டர்லாக்கிங் பணி: திருச்சி மார்க்கத்தில் ஆகஸ்ட் 1 முதல் 16 ரயில்கள் ரத்து, சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றம்

தஞ்சை- சென்னை மார்க்கத்தில் 44 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 17 வாராந்திர விரைவு ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ananthapuri Express converted to Super Fast on October 1st

ரயிலில் நம்பரும் கொல்லம்-சென்னை ரெயில் வண்டி எண் 16824-க்கு பதிலாக வண்டி எண் 20636 ஆகவும், சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 16823-க்கு பதிலாக வண்டி எண் 20635 எனவும் மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்சனில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்றுள்ள 8-வது நடைமேடையில் உள்ள ரயில் தண்டவாளத்தை இணைக்கும் இண்டர் லாக்கிங் பணிகள் நடைபெறுவதால், ஆக.1-ம் தேதி வரை திருச்சி மார்க்கத்தில் 16 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.

Advertisment

அதேபோல், தஞ்சை- சென்னை மார்க்கத்தில் 44 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 17 வாராந்திர விரைவு ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விபரம் வருமாறு;

ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் 16 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே மண்டலத்தின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் மின்னணு அதிநவீன இண்டர் லாக்கிங் வசதி கொண்ட முக்கிய ரயில் நிலையமாக திருச்சி ஜங்ஷன் உள்ளது. தொலைதூர ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Trichy cancelled train list

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலும், சுற்று வட்டாரப் பகுதியிலும் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும்போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.

எனவே, ரயில்களை சீராக இயக்குவதற்கு ஏதுவாக, திருச்சி சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த 20-ம் தேதி முதல் இண்டர் லாக்கிங் (பராமரிப்பு) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் தற்போது பொன்மலை அருகே திருச்சி-சென்னை வழிதடத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் வழிதடங்களில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த பணிகளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Trichy cancelled train list

இதனால் திருச்சி கோட்டத்தில் வருகிற 1-ம் தேதி வரை ரயில்களை ரத்து செய்தல், பகுதியாக ரத்து செய்தல், மற்றும் ரயில் வழித்தடங்களை மாற்றியமைத்தல் போன்ற ரயில் சேவைகளின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

அதன்படி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விபரம் வருமாறு;

வண்டி எண் 16233-16234 மயிலாடுதுறை - திருச்சி ரயில் இன்று (புதன்கிழமை), மற்றும் 31-ம் தேதி, ஆகஸ்டு 1-ம் தேதி.

வண்டி எண் 06498-06499 திண்டுக்கல்- திருச்சி ரயில் 27, 30, 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி,

வண்டி எண் 06729- தஞ்சை - திருச்சி ரயில் 29,30, 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி.

வண்டி எண் 06683 தஞ்சை - திருச்சி ரயில் 30, 31, மற்றும் 1-ந் தேதி,

வண்டி எண் 06871 தஞ்சை - திருச்சி ரயில் 30, 31, 1-ந் தேதி.

வண்டி எண் 06876 திருச்சி- தஞ்சை ரயில் 30, 31, 1-ந் தேதி.

வண்டி எண் 06829-06830 திருச்சி- மானாமதுரை 30, 31, 1-ந் தேதி.

வண்டி எண் 12084-12083 கோவை - மயிலாடுதுறை 30, 31-ந் தேதி.

வண்டி எண் 06869 தஞ்சை - திருச்சி ரயில் 1-ந்தேதி.

வண்டி எண் 12636 மதுரை - சென்னை அதிவிரைவு ரயில் 1-ந்தேதி.

வண்டி எண் 12605 சென்னை - காரைக்குடி அதிவிரைவு ரயில் உள்பட 16 ரயில்கள் 1-ந்தேதி உள்ளிட்ட தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

எந்தெந்த ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன, எந்தெந்த ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன போன்ற விபரங்களை www.kooapp.com/profile/drmtpj என்ற இணையத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளவும் பிரத்யேக ஏற்பாட்டினை ரயில்வே நிர்வாகம் செய்திருக்கின்றது.

14.08.2023 முதல் தஞ்சாவூர் / கும்பகோணம் / மயிலாடுதுறை / காரைக்கால் / திருச்சி / செங்கோட்டை / அகமதாபாத் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

1. சோழன் அதிவிரைவு

● 22676 சென்னை - சோழன்

》 திருச்சி 11.00 AM

》 தஞ்சாவூர் 11.45 AM

》 கும்பகோணம் 12.25 PM

》 சென்னை 06.15 PM

● 22675 திருச்சி - சோழன்

》 சென்னை 07.45 AM

》 கும்பகோணம் 01.05 PM

》 தஞ்சாவூர் 01.45 PM

》 திருச்சி 03.00 PM

2. திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ்

● 16233 திருச்சி எக்ஸ்பிரஸ்

》 மயிலாடுதுறை 08.05 AM

》 கும்பகோணம் 08.45 AM

》 தஞ்சாவூர் 09.20 AM

》 திருச்சி 10.20 AM

● 16234 மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

》 திருச்சி 01.05 PM

》 தஞ்சாவூர் 01.50 PM

》 கும்பகோணம் 02.30 PM

》 மயிலாடுதுறை 03.30 PM

3. திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி காலை பயணிகள் ரயில்.

● 06646 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்

》 திருச்சி 06.05 AM

》 தஞ்சாவூர் 07.15 AM

》 கும்பகோணம் 08.10 AM

》 மயிலாடுதுறை 09.05 AM

● 06413 மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில்

》 மயிலாடுதுறை 06.20 AM

》 கும்பகோணம் 07.05 AM

》 தஞ்சாவூர் 08.05 AM

》 திருச்சி 09.45 AM

4. தஞ்சாவூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் காலை பயணிகள் ரயில்.

●  தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்

》 தஞ்சாவூர் 12.30 PM

》 கும்பகோணம் 01.35 PM

》 மயிலாடுதுறை 02.55 PM

● 06415 மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்

》 மயிலாடுதுறை 07.00 AM

》 கும்பகோணம் 07.45 AM

》 தஞ்சாவூர் 08.55 AM

5. திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில்கள்

● 06490 காரைக்கால் பயணிகள் ரயில்

》 திருச்சி 07.05 AM

》 தஞ்சாவூர் 08.15 AM

》  காரைக்கால்  11.05 AM

● 06880 காரைக்கால் பயணிகள் ரயில்

》 திருச்சி 09.35 AM

》 தஞ்சாவூர் 10.45 AM

》  காரைக்கால்  02.05 PM

6. செங்கோட்டை மற்றும் அகமதாபாத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

● மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்

》 மயிலாடுதுறை 12.00 PM

》 கும்பகோணம் 12.35 PM

》 தஞ்சாவூர் 01.15 PM

》 திருச்சி 02.15 PM

》 செங்கோட்டை 09.30 PM

● திருச்சி - அகமதாபாத் எக்ஸ்பிரஸ்

》 திருச்சி 05.40 AM ஞாயிறு

》 தஞ்சாவூர் 06.30 AM

》 கும்பகோணம் 07.05 AM

》 அகமதாபாத் 09.15 PM திங்கள்

இதுதவிர திருச்சி கல்லுக்குழி காலனி பகுதியில் ரூ.4 கோடி செலவில் ரயில்வே ஜங்ஷனுக்கு 2-வது நுழைவு வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றி வந்து ரயில் நிலையத்தை அடைவதற்கு பதிலாக இந்த 2-வது நுழைவு வாயிலை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் இருந்து விடுபட ஏதுவாக இந்த 2-வது நுழைவு வாயில் அமையும் என்றால் அது மிகையல்ல.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment