Advertisment

பா.ஜ.க.,வினரே நாடாளுமன்றத்தை முடக்கினர்; திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் பா.ஜ.க.,வுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி தான், நேரடியாக சிம்ம சொப்பனமாக இருப்பது ராகுல் காந்தி தான். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் பேச்சு

author-image
WebDesk
New Update
Thirunavu

திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயலாற்ற  திருச்சி வந்திருந்தார்.

Advertisment

பின்னர், திருச்சி மெயின்கார்டுகேட் அருகே உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;

இதையும் படியுங்கள்: சென்னை டூ விழுப்புரம் மினி பேருந்துகள் இயக்கம்.. சிட்டி போக்குவரத்து பாதிப்பா? அதிகாரிகள் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் புகுந்ததில் இருந்து பா.ஜ.க.,விற்கு அடிவயிற்றில் புலியை கரைத்தது. அதானி, அம்பானி குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி என கேள்வி எழுப்பி, மோடியுடன் அதானி குடும்பத்தினர் எங்கு சென்றனர், எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அந்த குடும்பத்தினரின் நிதி உதவிக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எல்.ஐ.சி போன்ற பொதுமக்களுடைய வரிப்பணம் எவ்வளவு தரப்பட்டுள்ளது என்ற கேள்விகளை ராகுல் காந்தி அடுக்கடுக்காக பாராளுமன்றத்தில் கேட்டார். இதற்கெல்லாம் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. பிரதமரோ, நிதி அமைச்சர் யாரும் பதில் சொல்லவில்லை.

இதனால் பாராளுமன்றத்தை பா.ஜ.க.,வினரே முடக்கினர். பாராளுமன்ற வரலாற்றில் பா.ஜ.க அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே முடங்கி எந்த விவாதம் நடத்தப்படவில்லை. அவர்கள் அதை சாதகமாக்கி, விவாதமின்றி காரியங்கள் நிறைவேற்றி கொண்டார்கள்.

(JPC) ஜாயின்ட் பார்லிமென்ட்ரி கமிட்டி வேண்டும் என்று எதிர் கட்சிகளும் கேட்டனர். இதில் பா.ஜ.க கட்சியினரும் பா.ஜ.க கட்சி தான் தலைவராக இருப்பார். உண்மை வெளிவரும் என்ற காரணத்தால் JPC போட பா.ஜ.க பயப்படுகிறது.

ராகுல் காந்தி இந்தியாவுக்கு விரோதமாக பேசினார்கள் என்று சொல்லியும், எடுபடாததினால் இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தலில் பேசியதை எடுத்து அவர்களுக்கு சாதகமான மாஜிஸ்ட்ரேட்டை போட்டனர். மேலும், வீட்டையையும் காலி செய்யக் கோரும் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் இன்னும் வீடுகளை காலி செய்யாத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் வீட்டை உடனடியாக காலி செய்ய சொல்வது பழிவாங்கும் செயல்.

பாஜக ஜனநாயக கடமைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்ல எதிர்க்கட்சியின் ஜனநாயகக் குரல்வளையை ஒடுக்குவதாக உள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சனையில் சட்டப் பிரச்சனையை சட்டரீதியாக சந்திப்போம். அரசியல் ரீதியாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் ரீதியாக சந்திப்போம். ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

நாளை தி.மு.க சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈடுபடபோகிறது. போராட்டத்தில் காங்கிரசும் ஈடுபட உள்ளது. 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. 20 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பாக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் ஒன்றிய, மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

ஏழு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அரிஸ்டோ மேம்பாலம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என முதலமைச்சரிடம் சென்ற ஆண்டு கோரிக்கை வைத்துள்ளோம். நம்பிக்கை அதிகரிக்கும் வகையில், 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.600 கோடியில் திருச்சியில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிரதமர் இந்தியா முழுவதும் போகும்போது அதை எதிர்த்து போராடுவது எதிர்க்கட்சிகளின் கடமை, ஆர்ப்பாட்டம் நடத்துவது எங்களது கடமை. முதலமைச்சர் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது அரசாங்கத்தின் கடமை, எங்கள் கடமை நாங்கள் செய்தோம், அரசு கடமையை அவர்கள் செய்தார்கள்.

இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் பா.ஜ.க.,வுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி தான், நேரடியாக சிம்ம சொப்பனமாக இருப்பது ராகுல் காந்தி தான். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான். மு.க ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைப்பது கூட்டணிக்கு உதவாது என கூறி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இணைந்து போட்டியிட முடியாத கட்சிகளாக இருக்கலாம். ஆனாலும் அந்த கட்சிகளும் பா.ஜ.க.,வுக்கு எதிர்க்கட்சிகள் தான்.

ஒரு மாநிலத்தில் தேர்வு நடக்கும் போது அந்த மாநில மொழியில் தேர்வு எழுதக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். ஒன்றிய அரசு மாநிலத்திற்கு வரும்போது அவரிடத்தில் மாநிலத்திற்கு தேவையானதை திறமையாக கேட்டு பெறுவது தான் புத்திசாலித்தனம், எதிர்ப்பது தேவையற்றது.

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும் பொழுது சட்ட பிரச்சனை ஆராய்ந்து தான் அனுப்புவார்கள். ஆனால் ஆளுநர் முதல் கட்டத்திலேயே தடுத்து வைப்பது முறை அல்ல. ஆளுநர் மாநிலத்திற்கு துணையாய் இருக்க வேண்டும் தடையாக இருக்கக் கூடாது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவானது நிலையானது. இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ், கோவிந்தராஜ், வக்கீல் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Congress Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment