சறுக்கிய திருச்சி....

இந்த ஆய்வின் போது, 18 லட்சம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில்....

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று வெளியிட்டுள்ள தகவலில், சச் சர்வேக்ஷன் 2017 அறிக்கையின் படி, இந்தியாவின் மிக சுத்தமான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 434 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

மத்தியப் பிரதேச தலைநகர் போபால் இரண்டாம் இடத்திலும், கடந்த ஆண்டு 2016-ல் முதலிடத்தில் இருந்த மைசூரு 5-ஆம் இடத்திலும் உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த பட்டியலில் திருச்சி மட்டும் டாப் 10-ல் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி மாநகரம், இந்தாண்டு 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

அதேபோல், முதல் 50 இடங்களில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தின் 11 நகரங்களும், ஆந்திராவின் 8 நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், மொத்தம் 434 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது, 18 லட்சம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர், ஸ்வச் பாரத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close