ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க உடனடியாக நாம் இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போவோம்..
Advertisment
மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களை முன்மாதிரியாக கொண்டு, எதிர்காலத்தை தீர்மானிக்கின்றனர். எனவே, எளிமையான வாழ்க்கை முறை, நல்லொழுக்கத்தை, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்கள் ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
நல்ல ஆசிரியர்கள், நல்ல மாணவர்கள், நல்ல எதிர்காலம்...
தோசை வெறியர்களுக்காக ஒரு கடை
மத்திய அரசின், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம், ஜூன் 1 முதல், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. . இதன் மூலம், ரேஷன் அட்டை வைத்துள்ள, 81 கோடி மக்கள், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று மத்திய அரசு தெரிவிச்சிருக்கு...
காடுகளில் வாழ்ந்த மனிதன் இனி கார்டுகளில் வாழ்கிறான்.....
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான, ‘ஜொமேட்டோ’ அதன் போட்டி நிறுவனங்களில் ஒன்றான, ‘ஊபர் ஈட்ஸ்’ நிறுவனத்தை, 2,485 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது. சுவிக்கி நிறுவனத்திற்கு இந்த நிகழ்வு பெரும் போட்டியாக அமையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘ஊபர் ஈட்ஸ்’ நிறுவனத்தை விழுங்கிய, ‘ஜொமேட்டோ’
வேகாஸில திருமணம் செஞ்சுக்கிறது கோமாளித்தனமாம். நான் சொல்லலைங்க, நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராம் சொல்லியிருக்காங்க...
நல்லா கிளப்புறாங்கடா பீதிய...
ஓகே பிரெண்ட்ஸ், வேறொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye...