டிடிவி.தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் : 4 அமைச்சர்களின் கட்சிப் பதவி பறிப்பு ஏன்?

அதிமுகவில் 4 அமைச்சர்களின் கட்சிப் பதவிகளை பறித்து டிடிவி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் 4 அமைச்சர்களின் கட்சிப் பதவிகளை பறித்து டிடிவி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது தொடர்பான விசாரணை இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இதுவரை சசிகலா நியமனம் செல்லாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்க வில்லை.

aiadmk, aiadmk merger, ttv.dhinakaran, ttv.dhinakaran faction, 4 ministers sacked from party post

அமைச்சர் உதயகுமார்

அதனாலேயே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதுவரை கட்சியின் மாவட்டச் செயலாளராகவோ, தலைமைக்கழக நிர்வாகிகளாகவோ யாரையும் புதிதாக நியமனம் செய்யவில்லை. ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் மட்டும் புதிதாக ஒரு நிர்வாக அமைப்பை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கே.பி.முனுசாமி. வைத்திலிங்கம் ஆகியோரை உள்ளடக்கி உருவாக்கியிருக்கியிருக்கிறார்கள்.

ஆனால் சசிகலாவின் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதாக, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிரடி கிளப்பி வருகிறார். ஏற்கனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகளை நீக்காமல், காலியான இடங்களுக்கு மட்டும் புதிய நிர்வாகிகளை ஆரம்பத்தில் டிடிவி. நியமித்தார். அடுத்தபடியாக அதிமுக.வின் சார்பு அணிகளின் மாவட்ட இணை, துணை பொறுப்புகளில் சிலரை மட்டும் நீக்கினார்.

aiadmk, aiadmk merger, ttv.dhinakaran, ttv.dhinakaran faction, 4 ministers sacked from party post

அமைச்சர் வீரமணி

முதல்முறையாக ஆகஸ்ட் 23-ம் தேதி ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சியின் மாவட்டச் செயலாளர்களையே அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் டிடிவி.தினகரன். முதல் நடவடிக்கையாக ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராக இருந்து வந்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரை அவரது கட்சிப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியை அந்த பொறுப்பில் நியமித்தார். மதுரையில் ராஜன் செல்லப்பா வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துவிட்டு, அவருக்கு பதிலாக மனோகரனை அந்தப் பதவியில் நியமித்தார்.

தொடர்ந்து அதே நாளில் மேலும் 3 அமைச்சர்களின் கட்சிப் பதவிகளை டிடிவி.தினகரன் பறித்தார். இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு, எஸ். காமராஜ் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். கரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு செந்தில்பாலாஜி நியமிக்கப்படுகிறார்.

aiadmk, aiadmk merger, ttv.dhinakaran, ttv.dhinakaran faction, 4 ministers sacked from party post

அமைச்சர் காமராஜ்

வேலூர் மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து அமைச்சர் வீரமணி நீக்கப்பட்டு, ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.பாலசுப்ரமணி நியமிக்கப்படுகிறார். மேலும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி நீக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் செந்தமிழனும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து பலராமன் நீக்கப்பட்டு, பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலையும், புதுக்கோட்டை மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டு, கார்த்திகேயனும், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து ஆறுமுகம் நீக்கப்பட்டு கோதண்டபாணியும், அமைப்பு செயலாளராக இருக்கும் நெல்லை சுதா கே. பரமசிவன் நீக்கப்பட்டு, எஸ் முருகன், குடவாசல் எம்.ராஜேந்திரன், வேலாயுதம் ஆகியோர் அப்பதவியில் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

aiadmk, aiadmk merger, ttv.dhinakaran, ttv.dhinakaran faction, 4 ministers sacked from party post

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அந்தந்த மாவட்டங்களில் ஒன்றிய, பேரூர் அளவிலான நிர்வாகிகளையும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களையும் தனது அணியை நோக்கி திரட்டும் ஒரு முயற்சியாகவே இந்த அதிரடியை டிடிவி.தினகரன் மேற்கொண்டிருக்கிறார். முதல்கட்டமாக, மிகவும் வெளிப்படையாக தனது அணிக்கு எதிராக இயங்கும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகளை டிடிவி.தினகரன் பறித்துள்ளார். தமிழகம் முழுவதும் எதிர்ப்பாளர்களை அவர் கணக்கெடுத்து வருகிறார். எனவே  இந்த அதிரடி தொடரும் என்கிறார்கள்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close