டிடிவி அணி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : திமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை அவசர ஆலோசனை

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

By: Updated: August 27, 2018, 10:15:53 AM

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை இன்று (செப்.18) சபாநாயகர் தனபால் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் அது ஜெயித்து விடும். ஆனால் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்தே நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடக்குமா? என்பது முடிவாகும்.

இந்தச் சூழலில் 89 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கும் திமுக இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால், மேற்படி அதிரடி நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டார். பிற்பகல் 1 மணியளவில் இது குறித்து அறிவாலயத்தில் மூத்த வழக்கறிஞர்கள் சிலரை அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளையே (செப். 19) அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திமுக முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

மொத்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தால் ஆட்சிக்கு நெருக்கடி உருவாகும் என்கிற கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால், ‘அது கையில் இருக்கிற ஆயுத்தத்தையும் உதறி எறிவதற்கு சமம். அப்படி ராஜினாமா செய்தால், 6 மாதங்களில் அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்பதைத் தவிர, ஆளும்கட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை’ என சீனியர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

எனவே மொத்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஜனாதிபதியை மீண்டும் சந்திக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம், மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள், டிடிவி.தினகரன், சபாநாயகர் தனபால் நடவடிக்கை, தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு, சென்னை உயர்நீதிமன்றம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ttv.dhinakaran, cm edappadi palaniswami, aiadmk, speaker dhanapal, dmk, m.k.stalin, TN assembly,dmk mla’s meeting, TN assembly floor test, ttv.dhinakaran faction, ttv.dhinakaran faction 18 mla’s disqualified, speaker dhanapal action

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ttv dhinakaran faction 18 mlas disqualified tomorrow dmk mlas urgent meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X