கார் விபத்தில் சிக்கினார் பெங்களூரு புகழேந்தி : டிடிவி தினகரன் ஆறுதல்

டிடிவி தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கார் விபத்தில் சிக்கினார். அவருக்கு கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
pugalenthi, ttv dhinakaran, aiadmk, karnataka, car accident, dindugul district

டிடிவி தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கார் விபத்தில் சிக்கினார். அவருக்கு கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisment

டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி. இவர் கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்றார்.

புகழேந்தி சென்ற கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் புகழேந்தியின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜெயராஜ், மேத்யூ ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புகழேந்தி மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார். புகழேந்தியை டிடிவி தினகரன் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

Advertisment
Advertisements

 

Dindugul District Ttv Dhinakaran Pugalenthi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: