Advertisment

புதிய கொடியுடன் டி.டி.வி. தினகரன்... ஜெயகுமாருடன் வந்த மதுசூதனன் : களை கட்டிய ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் களை கட்டியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வந்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், ஜெயகுமாருடன் வந்திருந்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk, rk nagar, E.Madhusudhanan, dmk, marudhu ganesh, ttv dhinakaran, minister jeyakumar

ஆர்.கே.நகர் களை கட்டியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வந்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், ஜெயகுமாருடன் வந்திருந்தார்.

Advertisment

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் இ.மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (டிசம்பர் 1) திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் கேட்டிருந்தனர். திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதியம் 12 மணி, டிடிவி தினகரனுக்கு 12.30 மணி, மதுசூதனனுக்கு 1 மணி என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆர்.கே.நகர் தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுவை அளித்தார். இதேபோல் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

டி.டி.வி.தினகரனுடன் வந்த அவரது ஆதரவாளர்களின் கைகளில் இருந்த ஒரு கொடி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதிமுக.வின் கருப்பு, வெள்ளை, கருப்புக் கொடியில் நடுவில் உள்ள அண்ணா உருவம் மட்டும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தக் கொடி! அதிமுக கொடியையே பயன்படுத்துவோம் என கூறிவந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புதிய கொடியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது இதன் மூலமாக உறுதியானது.

முன்னதாக டிடிவி தினகரன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு நிருபர்களிடம் பேசுகையில், ‘எதிரிகளையும், துரோகிகளையும் வென்று இரட்டை இலையை மீட்டெடுப்போம்’ என்றார் அவர்.

டிடிவி தினகரனைப் போலவே அதிமுக வேட்பாளர் மதுசூதனனும் திரளான தொண்டர்களுடன் வந்து ‘மாஸ்’ காட்டினார். அவருடன் உள்கட்சி அரசியலில் அவரது எதிரியாக வர்ணிக்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் வந்தார். ஆனாலும் மதுசூதனன், அவருடன் நெருக்கம் காட்டாதவராகவே காணப்பட்டார். அதிமுக தேர்தல் பொறுப்பாளரான வெங்கடேஷ்பாபு எம்.பி.யும் இவர்களுடன் வந்தார்.

பொதுவாக இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது கட்சிகளின் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் உடன் இருப்பது வழக்கம். ஆனால் மருது கணேஷ், மதுசூதனன் ஆகிய இருவர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோதும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளே உடன் வந்தது கட்சியினரை ஆச்சர்யப்படுத்தியது.

 

Dmk Marudhu Ganesh Ttv Dhinakaran Minister Jeyakumar E Madhusudhanan Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment