தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆட்சி அமைத்த ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை இதன் முன்னர் திமுக கண்டதில்லை. இந்த சூழலில் ``தி.மு.க-வில் எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தவறில்லை. ஆனால் அவரை அமைச்சராக்குவதில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்ற காரணம் தெரியவில்லை என தஞ்சாவூரில் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரகன் தனது 60-வது பிறந்தநாளை தஞ்சாவூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கொண்டாடினார். நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த 60 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டிய டி.டி.வி. தினகரன் அதனை தன் கையாலேயே அனைவருக்கும் வழங்கினார். சால்வை, மலர்கொத்து கொடுத்து பலரும் தினகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் டி.டி.வி. தினகரன் தெரிவிக்கையில்; ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான், தி.மு.க என்கிற தீய சக்தியை தேர்தலில் வீழ்த்த முடியும். பல கட்சிகளாக இருந்தாலும் ஒரணியில் இணைந்து போரிட்டால் தான் தேர்தல் என்னும் போர்களத்தில் தி.மு.க.,வை வெற்றி பெற முடியும்.
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். தி.மு.கவில் எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தவறில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் உதயநிதியை அமைச்சராக்க ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்ற காரணம் தெரியவில்லை. இதில் ஏதோ அவரசம் தெரிகிறது. இந்த அவசரத்திற்கான காரணத்தை காலம் உணர்த்தும்.
தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி. புதுச்சேரி மக்கள் அப்படி ஏமாறுவார்களா என தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் வருத்தத்தில் உள்ளனர். பழனிசாமி கம்பெனியை எதிர்த்து, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., திருந்தியிருப்பார்கள் என மக்கள் வாய்ப்பு அளித்தனர்.
விடியல் ஆட்சி என கூறினார்கள். தற்போது விடியா மூஞ்சி ஆட்சியாக உள்ளது என மக்கள் வருத்தத்தில் உள்ளனர். எனவே, புதுச்சேரியில் விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தி.மு.கவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்றார்.
அதேநேரம் அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றாலும், டாப்10 அமைச்சர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றார் அமைச்சர் உதயநிதி. அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வந்தாலும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு ஏன் இந்த அவசரம் எனத் தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி அமைச்சரானதை தொடர்ந்து திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாவின்(ஜெயலலிதா) உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.
பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கோவில்களில் சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக கோவை ராமநாதபுரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : “அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் ஆட்சியை ஏன் திமுகவிற்கு அளித்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் இருப்பதுதான் உண்மை எனவும்
மேலும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஏன் ஆக்கினார்கள்? என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவதாகவும்
மக்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் பழனிச்சாமி கம்பெனி செய்த தவறுகளை உணர்ந்துள்ளதாகவும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறிய அவர் சுயநலத்தாலும் பதவி வெறியாலும் ஒரு சமூகத்திற்கு மட்டுமான கட்சியாக சிலர் மாற்றியுள்ளதாகவும் எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரும் என அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்
மேலும் தற்போது அதிமுகவினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் தங்கள் மீது வழக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தினாலும் தாங்கள் இருக்கின்றோம் என்பதை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதாலும் தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே தவிர மக்களின் மீது உள்ள எண்ணம் எல்லாம் கிடையாது எனவும்
மேலும் வாய்ப்பு கிடைத்தால் பன்னீர்செல்வத்தை சந்திப்பேன் எனவும் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் மூவரும் இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அம்மாவின்(ஜெயலலிதா) உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும் .
மேலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சில மாதங்களில் தெரியவரும் என தெரிவித்தார் டிடிவி தினகரன்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி : பி.ரஹ்மான், க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.