இன்றாவது ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்ற வாசலை எதிர்நோக்கி தினகரன்!

இரட்டை இலை சின்னத்தைப் மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகர்கள் நரேஷ், பாபு ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாலும், பாஸ்போர்ட் இல்லாததால் தன்னால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது என்றும் கூறி, தனக்கு […]

இரட்டை இலை சின்னத்தைப் மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகர்கள் நரேஷ், பாபு ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாலும், பாஸ்போர்ட் இல்லாததால் தன்னால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது என்றும் கூறி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால், தினகரனை வெளியே விட்டால் சாட்சிகளை தனது பலத்தை பயன்படுத்தி கலைத்துவிடுவார். ஆகவே, அவரை ஜாமீனில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவின் ஜாமீன் மனு மீது இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ttv dinakaran bail case final verdict today

Next Story
‘சென்னை சில்க்ஸ்’ கட்டிடம் முற்றிலும் இடிக்கப்படும்; அமைச்சர் அதிரடிchennai silks fire
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express