ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் டிடிவி தினகரன் தீடீர் ஆலோசனை!

பரபரப்பான அரசியல் சூழலில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்பில் 7-எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

நேற்று டிடிவி தினரகன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 30-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், டிடிவி தினரனுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்க முடியும் என எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடம் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close