‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கடந்த மாதம் 25–ம் தேதி கைது செய்தனர்.
இடைத்தரகர் சுகேஷ் சந்தி சேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை மே 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், டிடிவி தினகரனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், வீடியோ காண்ஃபிரன்சிங் மூலமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் வீடியோ காண்ஃபிரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரது நீதிமன்ற காவலை வரும் மே 29-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.