மருது சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளாரே அது பற்றிய உங்கள் கருத்து என கேள்வியெழுப்பினர்.
மு.க. ஸ்டாலின், ஓபிஎஸ் சந்திப்பு?
இதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தயாரா எனக் கேட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரை சந்திப்பதில் தவறு இல்லை” என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் நடந்துகொள்கிறார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் இதுபோல் நடந்துகொள்வது சரியல்ல. எங்க வயசுக்கு நாங்களே கோபப்படுவது இல்லை. அவர் கோபம் கொள்கிறார். ஒரு காட்டுமிராண்டி போல் நடந்து கொள்கிறார்” என்றார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை
தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை பற்றிய கேள்விக்கு, ”இதில் தமிழ்நாடு அரசு எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 குடும்பங்களை சந்தித்துள்ளேன்.
நாங்கள் சாதாரண போராட்டத்தில்தான் கலந்துகொண்டோம். எங்களை குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்றார்கள் என்றார்கள். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பமும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே” என்றார்.
என் சித்தியை..
பின்னர் ஜெயலலிதா உயிரிழப்பு தொடர்பான ஆணையத்தில் சசிகலா மீது குற்றஞ்சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, “தூத்துக்குடி அறிக்கை உலகிற்கு தெரியும். அது சரி. அதனை சரி என்று சொல்கிறோம். ஆனால் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அரசியல் ரீதியாக உள்ளது என்று பலரும் கூறுகிறார்கள்.
மர்மமான அறிக்கை
ஏன் எங்களுக்கு எதிரானவர்கள் கூட அந்த அறிக்கை உண்மை இல்லை என்று கூறினார். அந்த அறிக்கை மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், “நான் என் சித்தியை காப்பாற்ற இவ்வாறு பேசவில்லை. அவர் மீது வீண் குற்றச்சாட்டு உள்ளது. இந்த அறிக்கையை மர்மமான முறையில் உள்ளது.
என் சித்தி மற்றும் விஜய பாஸ்கர் அரசியல்வாதி என்று வைத்துக் கொள்வோம், ராதாகிருஷ்ணன் நேர்மையான அதிகாரி. இது தவிர மேலும் சிலர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.