தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த நிலையில், பதவி ஆசை குறித்து பெரியாரின் கருத்தை டி.டி.வி. தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் ஆகஸ்ட் 17-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கடிதம் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
அதை ஏற்று சபாநாயகர் தனபால், மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அப்போது புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஓரிருவர் மட்டும் நேரில் வந்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர். அதை ஏற்காத சபாநாயகர் தனபால், செப்டம்பர் 14-ம் தேதி 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனிடையே, டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது எந்த நேரமும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், டிடிவி அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சபாநாயகர் தனபாலின் உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம் என, சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதன்படி, தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பதவி ஆசை குறித்து பெரியார் விமர்சனம் செய்ததை டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், “பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப்பற்றோ, நாட்டுப்பற்றோ சிறிதளவும் காண முடியாது”, விடுதலை, 3.5.1965 என குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை விமர்சிக்கும் விதத்தில் டிடிவி தினகரன் இந்த பதிவை பகிர்ந்தார். அந்த பதிவின் கீழ் பலரும், அத்தகைய பதவி ஆசை தங்களுக்கும் உள்ளது என்ற ரீதியில் கருத்திட்டிருந்தனர்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 18 September 2017
கூவத்தூர் முதல் கூர்க் வரையிலான காட்சியினால் உங்களுக்கும் உங்கள் தரப்பு எம்.எல்.ஏ க்களும் இது பொருந்தும் தானே!!!
— niranjan kumar (@niranjan2428) 18 September 2017
நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வருபவன் எதிரே வருபவனை பார்த்து உன் முகத்தில் கரி இருக்கிறது என சொல்வதுபோல உள்ளது.
— எல். எஸ். ஹரி (@ls_hari9043) 18 September 2017
டிடிவி தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் ????????????
— aswin sidharth (@aswin56) 18 September 2017
Antha korangu pomma enna vilai moment
— பள்வால் தேவன் (@VillanDa3) 18 September 2017
???????????? pic.twitter.com/Ca4fHK9ba0
— Karthick Viru (@Vijay_Rules_Da) 18 September 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.