Advertisment

டிடிவி தினகரனின் மாமியார் காலமானார்!

கடந்த சில நாட்களாக இருதய நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்த சந்தானலட்சுமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

author-image
Ganesh Raj
Jul 27, 2017 16:03 IST
santhanalakshmi, TTV Dinakaran,

சசிகலாவின் அண்ணியும், டிடிவி.தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி இன்று காலமானார்.

அதிமுக முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் வெங்கடேஷ். கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட இவரை, சசிகலா தனக்கு சிறைத்தண்டனை கிடைத்ததும் மீண்டும் கட்சியில் இணைத்தார். ஆனால் பொறுப்பு வழங்கவில்லை. இவரது தாயார் பெயர் சந்தான லட்சுமி. இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மனைவி ஆவார். அதேபோல அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனின் மாமியார்.

உடல் நலமின்றி இருந்த சந்தானலட்சுமி இன்று காலமானார். கடந்த சில நாட்களாக இருதய நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்த சந்தானலட்சுமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சந்தானலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி காலமானானர்.

#Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment