முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி-க்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.
அதிகவின் இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. அதில், மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, ஜெயலலிதாவின் மறைவு தந்த அதிர்ச்சியும், கவலையும் மிகுந்த சூழ்நிலையில் கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கென நியமிக்கப்பட்ட தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியும், அவர் அறிவித்த நியமனங்களும் ரத்து. ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கழகத்தின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் நேக்கத்தில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது என்ற இரண்டு தீர்மானங்கள் டிடிவி தரப்பை கலக்கமடைய செய்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி-க்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். மேலும், பொதுக் குழு தீர்மானம் செல்லாது எனவும், தீர்மானங்களை ஏற்க கூடாது என அந்த மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.,விஜிலா, சென்னையில் நடைபெற்றது பொதுக் குழுவே அல்ல. கூடிய விரைவில் சசிகலா அனுமதியுடன் பொதுக் குழு கூட்டப்படும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.