Advertisment

துருக்கி, சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் : உதவி எண்கள் அறிவிப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால்,அவர்களுக்கு உதவும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
துருக்கி, சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் : உதவி எண்கள் அறிவிப்பு

Men search for people among the debris in a destroyed building in Adana, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (AP Photo/Khalil Hamra)

துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால்,அவர்களுக்கு உதவும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

துருக்கி மற்றும் சிரியாவில்  திங்கள்கிழமை நிகழ்ந்த  நிலநடுக்காத்தால் 8 ஆயிராத்திற்கும் உயிரிழந்துள்ளனர். இதுபோல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கே நிலவும் பனியால் மீட்பு நடவடிக்கை தாமதமாகிறது. மேலும் இந்தியாவிலிருந்து மீட்புக் குழு துருக்கி சென்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.  இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. பாதிக்கபட்டவர்கள், 044-28525648, 044-28515288 என்ற எண்ணிக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment