3 வயது சிறுவனின் உயிரை பறித்த டிவி.. பெற்றோர்கள் செய்யும் தவறு என்ன?

3 வயது குழந்தையான கவியரசு ஓடிச்சென்று செல்போனை எடுக்க முற்பட்டுள்ளார்.

By: Updated: August 18, 2020, 10:26:58 AM

parents awareness in home : சேலையூர் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் அகரம்தென் அன்னை சத்யா நகர் குடியிருப்பை சேர்ந்தவர், பாலாஜி. இவருக்கு மூன்று வயதில் கவியரசு என்று ஒரு மகன் இருந்துள்ளான். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களது வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை கட்டைகளின் மீது வைத்துள்ளதாக அப்பகுதியினர் சொல்கின்றனர். அதுவும் பாதுகாப்பற்ற முறையில் இருந்துள்ளது. மேலும், அந்த தொலைக்காட்சின் மேல் தான் பாலாஜி தனது மொபைலை சார்ஜ் போடுவது வழக்கமாம்.. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சார்ஜ் இடப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வர 3 வயது குழந்தையான கவியரசு ஓடிச்சென்று செல்போனை எடுக்க முற்பட்டுள்ளார்.

அப்போது சார்ஜர் வயரில் மாட்டியிருந்த டிவி, செல்போனை எடுக்க குழந்தை இழுத்தபொழுது டிவி குழந்தை கவியரசு மீது விழுந்துள்ளது. சத்தம்கேட்டு வெளியில் இருந்த குழந்தையின் தந்தை அலறியடித்து ஓடிவந்து கவியரசுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். தற்போது உயிரிழந்த 3 வயது குழந்தை கவியரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. டிவி மேலே விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் இருந்த கட்டைகள் மற்றும் தொலைக்காட்சி அந்த குழந்தை மீது விழுந்துள்ளது. இதனால், குழந்தை அந்த இடத்தில் மயங்கி விழுந்துள்ளான் . அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது குழந்தை மரணம் அடைந்துள்ளது.

கவியரசின் பெற்றோர் இருவரும், சம்பாம் நடக்கும் போது வெளியில் தான் இருந்துள்ளனர். செல்போன் அழைப்பு வரும் போது இருவரும் அதை கவனிக்கவில்லை. குழந்தை தனது அப்பாவிடம் செல்போனை எடுத்துக் கொடுக்க முறப்பட்டபோது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெற்றோர்கள் கவனத்திற்கு:

இந்த சம்பவத்தில் மூல காரணம் என்றால் செல்போன் தான். 3 வயது சிறுவனுக்கு எட்டும் தூரத்தில் பெற்றோர்கள் செல்போனை வைப்பது, டிவிக்கு பக்கத்திலேயே செல்போனுக்கு சார்ஜ் போடுவது என அலட்சியமாக நடந்துக் கொண்டதால் அவர்களின் செல்ல மகனை இழந்துள்ளனர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் கவனமாக நடந்துக் கொள்வது மிக மிக அவசியம். சமீபகாலமாக குழந்தைகளின் மரணம் பெற்றோர்களின் அலட்சியத்தினாலே நிகழ்வதாக அதிர்ச்சி தகவல்களும் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tv falls on 3 years old boy parents awareness in home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X