இனி 1200 மார்க் கிடையாது! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “+2, +1 -ல் இனி 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்கள் எனும் புதிய  முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல்,  +1, +2 மாணவர்களின் தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படுகிறது. ஒன்றாம்…

By: Updated: May 23, 2017, 04:50:48 PM

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “+2, +1 -ல் இனி 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்கள் எனும் புதிய  முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல்,  +1, +2 மாணவர்களின் தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படுகிறது.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. தமிழக வரலாறு, கலாச்சாரம் போன்றவை இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அறிவியலில் ஒரு பாடமாக ஐ.டி. இருக்கும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக இந்த புதிய பாடத்திட்டம் இருக்கும். 2018-19 கல்வியாண்டில் 1, 6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அதேபோல 2019-2020 கல்வியாண்டில் 2,7,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும். 2020-2021 கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 11-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து 12-ம் வகுப்பில் படிப்பார்கள். 11ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்வுகளை எழுதலாம். தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

செய்முறை கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க மாவட்டத்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரிகளுக்கு தற்கால பணிகள், அரசு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர்களை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்பர்” என்று தெரிவித்தார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Twelth maximum marks reduced from 1200 to

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X