scorecardresearch

”கூடிய விரைவில் ஓ.பி.எஸ் ஆளுநர்: இ.பி.எஸ்-க்கு இந்த பதவி கிடைக்கும்” : உதயநிதி ஸ்டாலின்

கூடியவிரைவில் ஓ. பன்னீர் செல்வம் ஆளுநர் ஆவார் என்று தேர்தல் பரப்புரையின் போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

”கூடிய விரைவில் ஓ.பி.எஸ் ஆளுநர்: இ.பி.எஸ்-க்கு இந்த பதவி கிடைக்கும்” : உதயநிதி ஸ்டாலின்

கூடியவிரைவில் ஓ. பன்னீர் செல்வம் ஆளுநர் ஆவார் என்று தேர்தல் பரப்புரையின் போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சார்பாக தேர்தல் பர்பபுரையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது “ தமிழிசை அவர்கள் தெலிங்கானா ஆளுநர் ஆகிவிட்டார். தமிழக பாஜகவில் இருக்கும் அனைவரும் ஆளுநராகின்றனர். கூடியவிரைவில் ஓ. பன்னீர் செல்வம் ஆளுநராக மாறுவார். எடப்பாடி பழனிசாமி பாஜக மாநில தலைவராக மாறுவார். நீஙக்ள் எதை எதிர்பார்பீர்கள் என்று எனக்கு தெரியும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 கொடுக்கும் திட்டத்தை பற்றிதான் என்னிடம் கேள்வி கேட்பீர்கள். உங்கள் முகங்களை பார்த்தாலே தெரிகிறது. கூடியவிரைவில் இந்த திட்டத்தை தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்” என்று அவர் கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Udhayanidhi stalin says o panneerselvam will become governor soon

Best of Express