ஜிஎஸ்டி வரியால் எந்தவித விலைவாசி உயர்வும் ஏற்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருவதால் விலைவாசி உயர்வு ஏற்படாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால் விலைவாசி அதிகரிக்கும் கூறுபவர்களுக்கு நான் பதில் கூறுகிறேன். அதாவது,தற்போது ஒரு வரி இருந்தால் அந்த வரியை விட ஜிஎஸ்டி-யில் அதிகமான வரி இல்லை. தற்போது இருக்கக்கூடிய வரியையே ஜிஎஸ்டி எடுத்துக் கொள்கிறது. மேலும், இருக்கக்கூடிய வரியை விட குறைவாக தான் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், எந்த பொருட்கள் மீதும் தற்போது இருக்கக்கூடிய வரியை விட அதிகமான வரி இல்லை. எனவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் போது விலைவாசி ஏற்படாது என்று கூறினார்.

×Close
×Close