Advertisment

ஓர் ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க இலக்கு: கோவையில் மத்திய அமைச்சர் தகவல்

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தேசத்தின் 45 பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை காணொளி காட்சி மூலம் பிரதமர் வழங்கினார்.

author-image
WebDesk
New Update
Union Minister says Target to provide employment to 10 lakh people in a year

பிரதமர் நரேந்திர மோடியால் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கும் Rozgar Mela - வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 96 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜன.20) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையினை வழங்கினார்.

Advertisment

நாடு முழுவதும் இன்று 71"ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி அணையை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டு - வருமானவரித்துறை, தபால் துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் துறைகளில் பணி ஆணை பெறும் 91 பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் பேசுகையில், 'பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக ,Rozgar Mela, எனும் வேலைவாய்ப்பு விழாவின் மூலம் இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

இதற்கு முன்பு தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, பி எல் ஐ, திறன் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த வகையில் Rozgar Mela திட்டமும் வேலை வாய்ப்புகளை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வைத்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி 75 ஆயிரம் பணி நியமன ஆணைகளை வழங்கி இந்நிகழ்ச்சியினை பாரத பிரதமர் துவக்கி வைத்தார். L திட்டம் துவங்கி ஒரு வருடத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்பு வழங்குவது இலக்காக கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தேசத்தின் 45 பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை காணொளி காட்சி மூலம் பிரதமர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் Karmayogi Parambh Module என்கிற திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெரும் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று 71 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன அணைகளை பாரத பிரதமர் வழங்குகிறார். Karmayogi Parambh Module அனுபவங்கள் குறித்தும் இதில் பகிரப்படுகிறது.

ரயில்வே, உயர் கல்வி, மருத்துவம் தபால் துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்ருவதற்கான பணி நியமன அணைகளை பெற்றுள்ளனர். இந்திய 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்குவது தேசத்தின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும்' எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment