/indian-express-tamil/media/media_files/D8yPG2t0lVXYspuYCxWf.jpg)
வி.ஏ.துரை மரணம்
உடல் நலக்குறைவு காரணமாக தாயாரிப்பாளர் வி.ஏ.துரை உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினருமான வி.ஏ.துரை நேற்றிரவு சென்னையில் அவரது வீட்டில் மரணமடைந்தார்.
முன்னதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டதை அறிந்த நடிகர்கள் இவருக்கு உதவி செய்தனர்.
தாயாரிப்பாளர் வி.ஏ. துரை விக்ரம், சூரியா, விஜயகாந்த், சத்தியராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து என்னமா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன் , கஜேந்திராஉள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். ஆரம்ப காலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக எவர்கிரீன் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.