சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே தஹில் ரமணி இன்று பதவியேற்றுக் கொண்டார்.  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில் ரமணி பதவியேற்பு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பதவியேப்பு உறுதி மொழி செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 6 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் கொலிஜியம் பரிந்துரைத்தது. மத்திய அரசும் விஜயா கமலேஷ் தஹில்ரமணியை நியமிக்க பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து குடியரசு தலைவர் விஜயா கமலேஷ் தஹில்ரமாணி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து அண்மையில் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அவர் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, 1958 அக்டோபர் 3 ஆம் தேதி பிறந்தார். இவர், 1982 ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

குற்றம் மற்றும் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வந்த இவர், மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2001 ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அந்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வருகின்றார்.

இன்று பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்கின்றது. இன்னும் காலிப்பணியடம் 12ஆக உள்ளது.

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை செயலாளர், டிஜிபி அசோக் குமார், சென்னை காவல்துறை ஆணையர், உயர் அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close