vaiko | 2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பிலும், அதிமுக தனித்தும், பாஜக தனித்தும் சந்திக்கின்றன.
பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவரிடம் திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்டீர்கள் என்ற கேள்விக்கு, “முதல் ரவுண்ட் சும்மா பார்த்துட்டு வந்து இருக்காங்க. தொகையோ, சீட்டோ இன்னமும் பேசவில்லை” என்றார்.
எத்தனை சீட்கள் கேட்டீர்கள் என்ற கேள்விக்கு, “அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும்” என்றார். திமுக கூட்டணி மீதான அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, “அவர் உளறிக்கொண்டிருக்கிறார். இதெற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?” என்றார்.
அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனத்துக்கு பதிலளித்த வைகோ, “இது கண் தொடைப்பு இல்லை; அந்த ஆள அனாவசியமாக பேசக் கூடாததை பேசுகிறார். இதற்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“