வந்தே பாரத் திட்டம்: சென்னைக்குப் பதில் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

பயணிகள் .தாங்கள் தேர்வு செய்து கொண்ட, தனிமைப்படுத்தும் வசதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென மாநில அரசால் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

By: Updated: May 16, 2020, 04:38:19 PM

பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வந்தே பாரத் மிஷன் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  முதல் கட்டமாக 11 விமானங்கள் தமிழ்நாட்டிற்கும், அதில் ஒன்பது விமானங்கள் சென்னைக்கு வந்தடைந்தது. கடந்த ஒரு வாரங்களில் மட்டும், மொத்தம் 1691 பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, இரண்டாம் கட்ட  வந்தே பாரத் மிஷன் இயக்கத்தில்,  சில சர்வேதேச விமானங்களை திருச்சியில் தரைஇறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளாக  உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்கு கட்டாயமாக அமைப்பு ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே, சென்னை பெருநக கொரோனா தொற்றால் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. இதனால், அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தனிமைப்படுத்தும் வசதியை சென்னையில்  ஏற்படுத்துவது கடினமாக இருப்பதாக ஆதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பொருட்டு, திருச்சியிலும் அதனை சுற்றியுள்ள கருர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற  மாவட்டங்களில்  குறைந்தது 15,000 மக்கள் தங்கும் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.


இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “வெளிநாடுகளில் இருந்து  வரும் பயணிகள் அனைவருக்கும் சுகாதாரத் துறையின் குழுவினரால் காய்ச்சல் உள்ளதா என்றும், கோவிட் நோய் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் தெரிகின்றனவா என்று சோதிக்கப்படும்.  விமான நிலைய வருகைக் கூடத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ஒவ்வொரு பயணியிடமிருந்தும் மாதிரிகளும் எடுக்கப்படும். பின்னர், பயணிகள் .தாங்கள் தேர்வு செய்து கொண்ட, தனிமைப்படுத்தும் வசதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென மாநில அரசால் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vande bharat mission chennai flights divert to trichy airport quarantine facility chennai coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X