கலசப்பாக்கம் எம்.எல்.ஏ வை தாக்கிய வசந்தாமணி திடீர் மரணம் : சிறையில் அடைக்கப்பட்டவர் இறந்தது எப்படி?

வசந்தா மணி என்ற நபர், பன்னீர் செல்வத்தின் காலில் விழுவது போல் நடித்து, அவரை அறைந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை அறைந்த வசந்தா மணி என்பவர், மருத்துவமனையில் திடீரென்று உயிரிழந்தார்.

அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது. போளூரில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டார். அப்போது, இதே வசந்தா மணி என்ற நபர், பன்னீர் செல்வத்தின் காலில் விழுவது போல் நடித்து, அவரை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த பன்னீர்செல்வத்தை உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்பு, சட்ட மன்ற உறுப்பினரை அறைந்த வசந்தா மணியை காவல் துறையினர், கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 24 ஆம் தேதி, வசந்தா மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வார சிகிச்சைக்கு பின்னர், இன்று(31.1.18) அவர் மருத்துவமனையில் திடீரென்று உயிரிழந்தார். வசந்தா மணியின் மனைவி மற்றும் வழங்கறிஞர் ஆகியோர், அவரது மரணத்தில் சந்தேகம் இறப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

எம்.எல்.ஏ.தாக்கப்பட்ட செய்தியை வாசிக்க

×Close
×Close