Advertisment

விடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்

VCK Conference at Tiruchi: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன் அதற்கான தீர்மானத்தை வாசித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VCK Conference at Tiruchi, விடுதலை சிறுத்தைகள் மாநாடு, திருச்சிராப்பள்ளி, திருமாவளவன்

VCK Conference at Tiruchi, விடுதலை சிறுத்தைகள் மாநாடு, திருச்சிராப்பள்ளி, திருமாவளவன்

MK Stalin, Thol Thirumavalavan at Tiruchi VCK Conference:: விடுதலை சிறுத்தைகள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ‘தேசத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மாநாடு திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாடு இன்று (ஜனவரி 23) மாலையில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

VCK Conference in Tiruchi Live: விடுதலை சிறுத்தைகளின் மாநாடு தொடர்பான நிகழ்வுகள் இங்கே:

8:10 PM: புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை திருமாவளவன் வரவேற்றார்.

8:00 PM: மார்க்சிஸ்ட் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், ‘நாட்டுக்கு தேவை இப்போது தலைவர்கள் அல்ல. மதச்சார்பின்மை, சமூக நீதி தேவை. ஆனால் பாஜக.வினர் நாங்கள் மோடியை முன்னிறுத்துகிறோம். நீங்கள் யாரை நிறுத்துவீர்கள்? என்கிறார்கள்.

2004-ல் இப்படித்தான் வாஜ்பாயை குறிப்பிட்டார்கள். அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவி, மன்மோகன்சிங் பிரதமர் ஆனார்.’ என குறிப்பிட்டார்.

7:55 PM: ‘இடதுசாரிகள், தலித்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகிற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆட்சியை வீழ்த்துவோம். விகிதாச்சார தேர்தல் முறையை ஆதரித்து தீர்மானம் கொண்டு வந்த திருமாவளவனை பாராட்டுகிறேன்’ என்றார் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி.

7:45 PM: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், ‘தமிழகத்தை பாதுகாக்க மு.க.ஸ்டாலினிடம் ஆட்சியை ஒப்படையுங்கள். இந்தியாவை பாதுகாக்க இங்கு கூடியிருக்கும் ஜனநாயக அணியிடம் ஆட்சியை ஒப்படையுங்கள்’ என்றார்.

7:10 PM: மாநாட்டு தீர்மானங்களை திருமாவளவன் வாசித்தார். 1. கலைஞர் மறைவுக்கு இரங்கல் 2. அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம். 3. சமூக நீதியை பாதுகாப்போம். 4.வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

5. ஆணவக் கொலைகளை கட்டுப்படுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். 6. சபரிமலை தீர்ப்பை வரவேற்போம். 7. எழுத்தாளர் கல்புர்கர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதத்தை தடை செய்ய வேண்டும். 8.மேகதாது அணை கட்ட ஆய்வுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 9. அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். 10. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.  11. இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7:05 PM: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், ‘தேசத்தை காக்க வேண்டும் என்றால் பாஜக.வும், சங்க பரிவாரங்களும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். கொல்கத்தாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது போல, இது இரண்டாம் சுதந்திரப் போராட்டம்.

சுதந்திரப் போராட்டத்தில் எப்படி பாடுபட்டார்களோ, அதேபோல பாடுபட்டு பாஜக.வை வீழ்த்துவோம்’ என்றார்.

7:00 PM: மாநாட்டில் மார்க்சிஸ்ட் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

6:55 PM : வைகோ பேசுகையில், ‘எங்கள் தமிழகத்தை பாலைவனமாக்குகிற முயற்சியில் மத்திய அரசு வெற்றி பெறுமானால், இங்கு இருக்கிற மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு சொந்தம் என உக்ரைன் போல அறிவிக்கிற நிலமை ஏற்படும். இந்திய மக்கள் அந்த நிலைக்கு விடமாட்டார்கள்.

வாக்குச் சீட்டுகளை எங்களிடம் தாருங்கள். உச்ச நீதிமன்றத்தில் நாளை ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜராக இருப்பதால், திருமாவிடமும் திமுக தலைவரிடமும் அனுமதி பெற்று விடை பெறுகிறேன்’ என்றார் வைகோ.

6:15 PM : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன் அதற்கான தீர்மானத்தை வாசித்தார்.

 

Mk Stalin Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment