அப்துல் கலாமின் உருவப்படத்தை மனற்சிற்பத்தில் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதியன்று மாணவர்களிடையே சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரது நினைவிடம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே பேக்கரும்பு பகுதியில் உள்ளது. அங்கு, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அவருக்கு பிரமாண்ட மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல், மாநிலம் முழுவதும் அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திரளான பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டு ஏவுகணை நாயகனை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்துல் கலாமின் உருவப்படத்தை மனற்சிற்பத்தில் வடிவமைத்து சென்னை வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளி மாணவர்கள் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர். சுமார் 111 மாணவர்கள் இந்த மனற்சிற்பத்தை அமைத்து பிரமாண்டமான மனற்சிற்பத்தை அமைத்து பள்ளி மாணவர்கள் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர். விழாவில், அப்துல் கலாமின் சாதனைகளையும், வாழ்க்கை வரலாற்றையும் மாணவர்கள் உரைஈற்றி பகிர்ந்து கொண்டனர்.
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் அப்துல் கலாம் முகமூடி அணிந்து பேரணியாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.